Christmas: வந்துவிட்டது கிறிஸ்துமஸ்! இம்முறை சுவையான வாழைப்பழ கேக் வீட்டிலேயே செய்யுங்கள்… - Tamil News | How to make tasty banana cake at home details; food recipes in tamil | TV9 Tamil

Christmas: வந்துவிட்டது கிறிஸ்துமஸ்! இம்முறை சுவையான வாழைப்பழ கேக் வீட்டிலேயே செய்யுங்கள்…

Updated On: 

29 Nov 2024 22:50 PM

Banana Cake For Christmas: கிறிஸ்துமஸ் பண்டிகை வந்துவிட்டால் சொந்தம் பந்தம் நண்பர்களுக்கு கேக் கொடுப்பது வழக்கம். கடையில் கேக் வாங்கி கொடுப்பதை விட நீங்கள் வீட்டிலேயே சுத்தமாகவும் சுவையாகவும் செய்து உங்களின் அன்பானவர்களை அசத்துங்கள். வீட்டிலேயே எளிமையாக வாழைப்பழ கேக் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1 / 5கிறிஸ்துமஸ் நெருங்கி விட்டது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கேக் தனி இடம் பெறும். விதவிதமான கேக்குகள் சந்தையில் விற்கப்படும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேக் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் வீட்டில் செய்ய வேண்டும் என்றால் சற்று கடினமானதாக இருக்கும். எனவே பலரும் வெளியில் வாங்குகிறார்கள்.

கிறிஸ்துமஸ் நெருங்கி விட்டது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கேக் தனி இடம் பெறும். விதவிதமான கேக்குகள் சந்தையில் விற்கப்படும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேக் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் வீட்டில் செய்ய வேண்டும் என்றால் சற்று கடினமானதாக இருக்கும். எனவே பலரும் வெளியில் வாங்குகிறார்கள்.

2 / 5

வெளியில் வாங்கப்படும் கேக்கில் என்ன சேர்க்கப்படுகிறது, எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது.‌ ஆனால் இந்த கேக்கை வீட்டிலேயே மிக எளிமையாகவும் சுத்தமாகவும் செய்யலாம். வீட்டில் கேக் செய்ய‌ அடுப்பு, குக்கர் இருந்தால் குறைந்த நேரத்தில் கேக் செய்து முடித்து விடலாம்.‌ வீட்டிலேயே வாழைப்பழத்தை செய்வதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

3 / 5

வாழைப்பழ கேக் செய்வதற்கு தேவையான பொருட்கள். வாழைப்பழம், முட்டை, சர்க்கரை, உப்பு சேர்க்காத வெண்ணெய், மாவு, பேக்கிங் சோடா, உப்பு, வெண்ணிலா எசன்ஸ்.

4 / 5

முதலில் வாழைப்பழத்தை மிக்ஸியில் போட்டு மென்மையாக்கவும். பின்னர் குக்கரில் சிறிது வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவவும்.பின் அதில் மாவு பூச வேண்டும். அதன் பிறகு ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து அதில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அதை நன்றாகக் கிளற வேண்டும். அதன் பிறகு சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்றாக அடிக்கவும். இப்போது முட்டையின் மஞ்சள் கரு, வாழைப்பழ கூழ், வெண்ணிலா எசன்ஸ், வெண்ணெய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கலக்கவும். இவை அனைத்தையும் நன்றாகக் கலக்கவும்.

5 / 5

எல்லாவற்றையும் நன்றாக அடிக்கவும். இல்லையெனில் சுவை சரியாக இருக்காது. இப்போது இந்தக் கலவையை குக்கரின் பாத்திரத்தில் ஊற்றவும். பிறகு இதை அரை மணி நேரம் வேக வைக்க வேண்டும். கேக் தயாரானதும் தேங்காய் தூள், வாழைப்பழ துண்டு, ஜோக்கர் சிப்ஸ் சேர்த்து அலங்கரித்தால் சூப்பரான வாழைப்பழம் கேக் ரெடி.

டிஆர்பியில் சன் டிவி & விஜய் டிவி இடையே நடக்கும் கடும் போட்டி
இணையத்தை கலக்கும் நயன்தாராவின் இன்ஸ்டா ஸ்டோரி
மஞ்சள் நீரில் எந்த வைட்டமின் நிறைந்துள்ளது..?
குளிர் காலத்தில் மலிவு விலையில் செல்லக்கூடிய சுற்றுலா இடங்கள்!