Skin Care: மாறிவரும் வானிலை காரணமாக சரும வறட்சியா..? தடுக்க என்ன செய்யலாம்..? - Tamil News | How to prevent dry skin due to changing weather; Skin Care Tips in tamil | TV9 Tamil

Skin Care: மாறிவரும் வானிலை காரணமாக சரும வறட்சியா..? தடுக்க என்ன செய்யலாம்..?

Published: 

27 Oct 2024 22:27 PM

Skin Care Tips: மாறிவரும் காலநிலையில் சரும வறட்சி ஏற்படாமல் இருக்க, உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். எனவே, அதிக நீர்ச்சத்து உள்ள பழங்களையும், தண்ணீரை எடுத்து கொள்வதும் தோலை பராமரிக்க உதவி செய்யும். அதிக நீரேற்றமாக உடலை வைத்து கொள்வது, உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும்.

1 / 6மாறிவரும்

மாறிவரும் காலநிலை காரணமாக ஒரு நபரின் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, தோலிலும் பாதிப்பு ஏற்படும். இந்த காற்றானது சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை பறித்து வறட்சியை உண்டாக்கி வெள்ளை செதில்கள் உதிர ஆரம்பிக்கும். சருமம் வறண்டு போகும் போது, ​​ஒரு நபரின் முகத்தின் பொலிவு குறைந்து, சருமம் பல சமயங்களில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும். இந்த பருவத்தில் அதிக குளிர்ந்த அல்லது வெந்நீரை பயன்படுத்தினால் சரும பிரச்சனைகள் வரலாம்.

2 / 6

சருமம் வறண்டு போகும் போது, ​​ஒரு நபரின் முகத்தின் பொலிவு குறைந்து, சருமம் பல சமயங்களில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும். இந்த பருவத்தில் அதிக குளிர்ந்த அல்லது வெந்நீரை பயன்படுத்தினால் சரும பிரச்சனைகள் வரலாம்.

3 / 6

மாறிவரும் காலநிலையில் சரும வறட்சி ஏற்படாமல் இருக்க, உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். எனவே, அதிக நீர்ச்சத்து உள்ள பழங்களையும், தண்ணீரை எடுத்து கொள்வதும் தோலை பராமரிக்க உதவி செய்யும். அதிக நீரேற்றமாக உடலை வைத்து கொள்வது, உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும்.

4 / 6

மாறிவரும் காலங்களில் சரும வறட்சி ஏற்படுவதைத் தவிர்க்க, உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்ப மாய்ஸ்சரைசர் மற்றும் சன் ஸ்கிரீனை பயன்படுத்துங்கள். அதிக இராசயனங்கள் உள்ள மாய்ஸ்சரைசர் உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்.

5 / 6

ஸ்க்ரப்பிங் செய்வது சருமத்தின் இறந்த செல்களை குறைக்கவும், வெளியேற்றவும் உதவி செய்யும். ஸ்க்ரப்பிங் செய்வது சருமத்தை பிரசாகமாகவும், பளபளப்பாகவும் மாற்றும். ஆனால், உங்கள் கைகளை கொண்டு அழுத்தி, கடினமாக தேய்க்காமல் மெதுவாக ஸ்க்ரப்பிங் செய்யுங்கள்.

6 / 6

வறண்ட சரும பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற, நீங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தலாம். அந்தவகையில், இரவில் தூங்கும் முன் பச்சை பால், தேங்காய் ஆகிவற்றை தேனுடன் கலந்து முகத்தில் போட்டு தூங்கலாம். இது சருமத்தை பராமரிக்கும்.

அதிகாலையில் சைக்கிளிங் செய்வதால் கிடைக்கும் பலன்கள்!
இந்த பிரச்சனைகள் இருந்தால் நிச்சயம் ஆப்பிள் பழம் சாப்பிடக்கூடாது..
வேர்க்கடலை குறித்து ஆய்வுகள் கூறும் தகவல்கள்!
சர்க்கரை நோயாளிகள் எந்த 4 பழங்களை சாப்பிடக்கூடாது?