5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Jaundice: மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை வரலாம்! கண்டறிவது எப்படி?

Health Tips: பிறந்த குழந்தையின் இரத்த சிவப்பணுக்கள் உடைய தொடங்குவதால், பிலிரூபின் எனப்படும் மஞ்சள் நிறமி வெளியிடப்படுகிறது. இந்த பிலிரூபின் அளவு உடலில் அதிகமாக இருக்கும்போது பிறந்த குழந்தையின் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

mukesh-kannan
Mukesh Kannan | Published: 28 Nov 2024 21:18 PM
பருவ மாற்றத்தின் காரணமாகவும், மழைக்காலத்திலும் பெரியவர்கள், சிறியவர்கள், அவ்வளவு ஏன் பிறந்த குழந்தைகள் கூட பெரிய நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. மஞ்சள் காமாலை அத்தகைய நோய்களில் ஒன்றாகும். அந்தவகையில், புதிதாகப் பிறந்த குழந்தைகளில் அதிக அளவு பிலிரூபின் மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

1 / 6
குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் வரை, தாயின் தமனிகளில் இருந்து ஆக்ஸிஜனைப் பெறுகிறது. இரத்த சிவப்பணுக்கள் தாயின் உடலில் இருந்து கருவுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கின்றன. குழந்தை பிறந்த பிறகு, அதன் சொந்த நுரையீரல் வேலை செய்யத் தொடங்குகிறது.

2 / 6
பின்னர் அதிகப்படியான இரத்த சிவப்பணுக்கள் உடைக்கத் தொடங்கும். பிறந்த குழந்தையின் இரத்த சிவப்பணுக்கள் உடைய தொடங்குவதால், பிலிரூபின் எனப்படும் மஞ்சள் நிறமி வெளியிடப்படுகிறது.

3 / 6
இந்த பிலிரூபின் அளவு உடலில் அதிகமாக இருக்கும்போது பிறந்த குழந்தையின் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.  இதன் காரணமாக, பிறந்த குழந்தையின் தோல், கண்கள் மஞ்சள் நிறமாக மாறும்.

4 / 6
பொதுவாக, பிறந்த 3-7 நாட்களுக்குப் பிறகு உடலில் பிலிரூபின் அளவு அதிகமாக இருக்கும். இதனால், மஞ்சள் காமாலை வருவதற்கான வாய்ப்பும் அதிகம். குழந்தையின் தோலை லேசாக அழுத்தினாலும், அந்த பகுதி மஞ்சள் நிறமாக மாறினால், குழந்தை மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

5 / 6
கைகள் அல்லது கால்களின் உள்ளங்கைகளிலும் மஞ்சள் நிற அடையாளங்கள் இருந்தாலோ, குழந்தையின் சிறுநீர் அடர் மஞ்சள் நிறமாக இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகி, குழந்தைக்கு சிகிச்சை அளிப்பது நல்லது.

6 / 6
Latest Stories