5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பருவ காலத்தில் வரும் நோயில் இருந்து கருவுற்ற பெண்கள் எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும்? சில டிப்ஸ் இதோ..

கருவுற்ற பெண்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனை இருந்தால் வீட்டு உணவிலோ அல்லது இயற்கையான பாதுகாப்பான கை வைத்தில் குணப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தீவிர தொற்று இருந்தால் மட்டுமே மருத்துவர்கள் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பார்கள்.

aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 19 Nov 2024 13:35 PM
கருவுற்ற பெண்களுக்கு உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும், குறிப்பாக ஹார்மோன் பிரச்சனையால் சரும ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் முகப்பரு, தேமல், பிக்மெண்டேஷன், கழுத்தில் கருப்பு திட்டுக்கள் போன்ற பிரச்சனைகள் வரும். ஒரு சிலருக்கு முகமே அடையாளம் தெரியாமல் மாறிவிடும்.

1 / 6
ஆனால் இது நிரந்தரம் இல்லை. குழந்தையை பெற்றெடுத்த பின் உடலில் ஹார்மோன் சுரப்பிகள் சீராகி ஒரு சில மாதங்களில் பழைய நிலைக்கு உடல் திரும்பிவிடும். கர்ப்பக் காலத்தில் பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்கள் எளிதில் நோய்வாய்ப்பட வாய்ப்பு உள்ளது.

2 / 6
எனவே கர்ப்பக் காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் நீரேற்ற உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம். இந்த காலக்கட்டத்தில் மாத்திரை மருந்து சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் பெரும்பாலான மருத்துவர்கள் மாத்திரை பரிந்துரைக்க மாட்டார்கள்.

3 / 6
அப்படி கருவுற்ற பெண்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனை இருந்தால் வீட்டு உணவிலோ அல்லது இயற்கையான பாதுகாப்பான கை வைத்தியத்திலோ குணப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள  வேண்டும். தீவிர தொற்று இருந்தால் மட்டுமே மருத்துவர்கள் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பார்கள்.

4 / 6
இதிலும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தால் பணிக்குட நீர் குறைந்து மருத்துவர்கள் முன்கூட்டியே அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுப்பார்கள். இந்த சிக்கலான விஷயங்களை தவிர்க்க கருவுற்ற பெண்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

5 / 6
கரு உருவான முதல் நாளில் இருந்து அந்த பெண் மிகவும் கவனத்துடன் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினசரி உணவில் புரதம், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.  குறிப்பாக பருவ நிலை மாற்றத்தின் போது சாதாரண தண்ணீரை விட கொதிக்க வைத்த நீரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதே போல், வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும்.

6 / 6
Latest Stories