Navrathri: நவராத்திரி வழிபாட்டில் கொலு படிகள் அமைக்கும் முறை..! - Tamil News | how to set navrathri golu: Which toy should come in which step details in tamil | TV9 Tamil

Navrathri: நவராத்திரி வழிபாட்டில் கொலு படிகள் அமைக்கும் முறை..!

Published: 

01 Oct 2024 18:54 PM

Navrathri Golu: புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. காத்தல் அளித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் மூல காரணமாக விளங்கும் சிவன், பிரம்மன், விஷ்ணுவின் மனைவிகளான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி ஆகிய தெய்வங்களுக்கு வழிபாடு செய்யப்படும். இந்த நவராத்திரி அம்பிகைக்கு உகந்த நாளாகும். எனவே முதல் மூன்று நாட்கள் துர்கா வழிபாடு இரண்டாம் மூன்று நாட்கள் மகாலட்சுமி வழிபாடு கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வெளிநாடு என்று இந்த நவராத்திரி கொண்டாடப்படும்.

1 / 5கொலு

கொலு படிகளை 5, 7, 9 என்ற ஒற்றைப்படை வரிசையில் அமைக்க வேண்டும்.கொலு வைக்கும் பொழுது முதல் படியில் ஓரறிவு கொண்டவைகளான புல், பூண்டு, செடி, கொடி, தாவர வகைகளை வைக்க வேண்டும்.

2 / 5

இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட பிராணிகளின் பொம்மைகள், சிற்பி, சங்கு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும். மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான் பொம்மைகளை வைக்க வேண்டும்

3 / 5

நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவராசிகளின் பொம்மைகளை இடம்பெறச் செய்ய வேண்டும். ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும்

4 / 5

ஆறாவது படியில் ஆறறிவுக் கொண்ட மனித பொம்மைகள் மற்றும் நாட்டுக்காக உழைத்த தலைவர்களின் பொம்மைகள் இருக்க வேண்டும். ஏழாவது வழியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை இடம்பெறச் செய்ய வேண்டும்

5 / 5

எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், தெய்வங்கள், நவகிரகங்களின் பொம்மைகள் வைக்க வேண்டும். ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் அவர்களின் மனைவிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்கா ஆகிய மூவரின் உருவங்களையும் வைக்க வேண்டும். இதற்கெல்லாம் நடுவில் கொழுப்பீடத்தில் விநாயகப் பெருமானையும் ஆதி பராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும்.

Follow Us On
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version