5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tech Tips: இனி வெளிநாடுகள் செல்லும்போது ஃபோன் பே, கூகுள்‌பே ஆகியவற்ற பயன்படுத்தலாம்…

UPI Payment In Foreign: இந்தியாவில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மிகவும் பிரபலமான டிஜிட்டல் கட்டண முறைகளில் ஒன்றாகும். இது ஆன்லைன் பரிவர்த்தனைகளை மிகவும் எளிதாக்கியுள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலோனோ இதை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவையை இப்போது இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பயன்படுத்தலாம். UPI ஏற்கனவே இலங்கை, மொரிசியஸ், பூட்டான், ஓமன், நேபாளம், பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 03 Nov 2024 15:55 PM
UPI சேவை பட்டியலில் மேலும் 10 புதிய நாடுகள் இணைந்துள்ளன. இதில் மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தென்கொரியா போன்ற நாடுகள் உள்ளன. இந்த நாடுகளுக்கு இந்திய சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால் வெளிநாடுகளிலும் UPI கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

1 / 6
நீங்கள் பாலி, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டால் அங்கு UPI முறையில்  இயங்கி வரும் Phonepe, Google Pay போன்ற செயலி மூலம் எப்படி பரிவர்த்தனை செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

2 / 6
வெளிநாட்டிலும் UPI வேலை செய்வதால் இந்திய நாணயத்தை உள்ளூர் நாணயத்திற்கு மாற்றுவது பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியது இல்லை. UPI மூலம் நேரடியாக பணத்தை செலுத்தலாம். UPI மூலம் பணம் செலுத்த நீங்கள் UPI செயலியை பயன்படுத்த வேண்டும். சர்வதேச பயணத்திற்கு செல்வதற்கு முன் UPIஐச் செயல்படுத்த பின்வரும் செயல்முறைகளை பின்பற்றவும்.

3 / 6
Phonepe பயனர்கள் தங்கள் UPI பயன்பாட்டை திறந்து உள்ளே சுய விவரப் படத்தை கிளிக் செய்யவும். அங்கு கட்டண மேலாண்மை பிரிவில் UPI இன்டர்நேஷனல் என்பதை தேர்ந்தெடுக்கவும். சர்வதேச அளவில் பயன்படுத்துவதற்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் வங்கி கணக்கிற்கு அடுத்துள்ள செயலில் உள்ள பொத்தானை கிளிக் செய்யவும். உறுதிப்படுத்த UPI பின்னை உள்ளிட வேண்டும். அதன் பிறகு சர்வதேச கட்டணங்களுக்கு UPI இயக்கப்படும்.

4 / 6
Google Pay பயனர்கள் தங்கள் Google Pay பயன்பாட்டை திறந்து QR குறியீட்டை கிளிக் செய்யவும். இப்போது சர்வதேச வணிகரின் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். பின்னர் வெளிநாட்டு பண மதிப்பில் நீங்கள் செலுத்தும் தொகையை உள்ளிடவும்.‌ இதன் மூலம் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை வெளிநாட்டு ரூபாய் மதிப்பிற்கு அனுப்ப முடியும்.

5 / 6
சர்வதேச அளவில் UPI ஆதரிக்கும் வங்கி கணக்குகளில் மட்டுமே சர்வதேச பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது உங்கள் உள்ளூர் வங்கி கணக்குகள் எதுவும் இதை ஆதரிக்கவில்லை எனில் உங்களால் இதை வெளிநாடுகளில் பயன்படுத்த முடியாது. நீங்கள் வெளிநாடுகளில் ஸ்கேன் செய்த பிறகு செலுத்தப்படும் தொகை வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பிறகு இந்திய மதிப்பில் இருக்கும்.

6 / 6
Latest Stories