5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Stomach Cancer: வயிற்றில் இந்த 4 அறிகுறிகளா..? புற்றுநோய் அபாயமாக இருக்கலாம்!

Health Tips: வயிற்றில் உள்ள தொப்புளுக்கு மேல் தொடர்ந்து வலி, வீக்கம் போன்றவை இருந்தாலோ, உணவை விழுங்குவதில் சிரமம் இருப்பது போல் தோன்றினாலோ வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

mukesh-kannan
Mukesh Kannan | Published: 02 Dec 2024 08:30 AM
இரைப்பை செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி வயிற்று புற்றுநோய் அல்லது இரைப்பை புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. ஆரம்பத்திலேயே கண்டறியப்படாவிட்டால் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களால் வயிற்று புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கும்.

1 / 5
உங்களுக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம் பிரச்சனை இருந்தால் வயிற்று புற்றுநோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக இருக்கலாம். இது வயிற்றில் கட்டியின் வளர்ச்சியால் உங்களுக்கு அடிக்கடி ஏற்படும். புற்றுநோய் உடலின் வளர்சிதை மாற்றத்தை பாதித்து, பசியின்மை மற்றும் எடை இழப்பை ஏற்படுத்தும்.

2 / 5
அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் ஆகியவை வயிற்றுப் பிரச்சினைகளின் பொதுவான அறிகுறிகள்தான். ஆனால், மீண்டும் மீண்டும் வாந்தி எடுப்பது, சாப்பிட்ட பிறகு, ரத்த வாந்தி எடுப்பது போன்றவை வயிற்று புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

3 / 5
வயிற்றில் உள்ள தொப்புளுக்கு மேல் தொடர்ந்து வலி, வீக்கம் போன்றவை இருந்தாலோ, உணவை விழுங்குவதில் சிரமம் இருப்பது போல் தோன்றினாலோ வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

4 / 5
அதீத சோர்வு, இரத்த சோகை  போன்றவை உங்களுக்கு இருந்தால், அவைகளும் வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். எனவே, நோய்த்தொற்றுகள், அல்சர், அமிலத்தன்மை போன்றவை அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனை பேரில் சோதனை மேற்கொள்வது நல்லது.

5 / 5
Latest Stories