Stomach Cancer: வயிற்றில் இந்த 4 அறிகுறிகளா..? புற்றுநோய் அபாயமாக இருக்கலாம்! - Tamil News | If these 4 symptoms appear in the stomach, it may be cancer; health tips in tamil | TV9 Tamil

Stomach Cancer: வயிற்றில் இந்த 4 அறிகுறிகளா..? புற்றுநோய் அபாயமாக இருக்கலாம்!

Published: 

02 Dec 2024 08:30 AM

Health Tips: வயிற்றில் உள்ள தொப்புளுக்கு மேல் தொடர்ந்து வலி, வீக்கம் போன்றவை இருந்தாலோ, உணவை விழுங்குவதில் சிரமம் இருப்பது போல் தோன்றினாலோ வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

1 / 5இரைப்பை செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி வயிற்று புற்றுநோய் அல்லது இரைப்பை புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. ஆரம்பத்திலேயே கண்டறியப்படாவிட்டால் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களால் வயிற்று புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கும்.

இரைப்பை செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி வயிற்று புற்றுநோய் அல்லது இரைப்பை புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. ஆரம்பத்திலேயே கண்டறியப்படாவிட்டால் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களால் வயிற்று புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கும்.

2 / 5

உங்களுக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம் பிரச்சனை இருந்தால் வயிற்று புற்றுநோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக இருக்கலாம். இது வயிற்றில் கட்டியின் வளர்ச்சியால் உங்களுக்கு அடிக்கடி ஏற்படும். புற்றுநோய் உடலின் வளர்சிதை மாற்றத்தை பாதித்து, பசியின்மை மற்றும் எடை இழப்பை ஏற்படுத்தும்.

3 / 5

அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் ஆகியவை வயிற்றுப் பிரச்சினைகளின் பொதுவான அறிகுறிகள்தான். ஆனால், மீண்டும் மீண்டும் வாந்தி எடுப்பது, சாப்பிட்ட பிறகு, ரத்த வாந்தி எடுப்பது போன்றவை வயிற்று புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

4 / 5

வயிற்றில் உள்ள தொப்புளுக்கு மேல் தொடர்ந்து வலி, வீக்கம் போன்றவை இருந்தாலோ, உணவை விழுங்குவதில் சிரமம் இருப்பது போல் தோன்றினாலோ வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

5 / 5

அதீத சோர்வு, இரத்த சோகை போன்றவை உங்களுக்கு இருந்தால், அவைகளும் வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். எனவே, நோய்த்தொற்றுகள், அல்சர், அமிலத்தன்மை போன்றவை அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனை பேரில் சோதனை மேற்கொள்வது நல்லது.

40 வயதிற்கு பிறகு கைவிட வேண்டிய பழக்கங்கள்..!
பூண்டு சாப்பிடுவது யாருக்கு நல்லதல்ல..?
கலைக்கட்டும் கல்யாணம்... சோபிதாவின் போட்டோஸ் இதோ
விஜய்யா? ரஜினியா? யாருக்கு அதிக சம்பளம்?