5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

TN Goverment : மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், என்ஐடி ஆகிய கல்வி நிறுவனங்களில் படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

umabarkavi-k
Umabarkavi K | Published: 15 Nov 2024 18:55 PM
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. பள்ளி மாணவர்கள் தடையின்றி படிப்பை தொடர காலை உணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம், இலவச பேருந்து பயணம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, கல்லூரி மாணவர்களுக்காக மாதம் ரூ.1000 உதவித்தொகை, இலவச பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.  குறிப்பாக, உயர்கல்விக்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தி வருகிறது.  இந்த நிலையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

1 / 5
அதில், மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், என்ஐடி  ஆகிய கல்வி நிறுவனங்களில் படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஐஐடி, ஐஐஎம், என்ஐடி  ஆகிய கல்வி நிறுவனங்களில் படிக்கும் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு  ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 / 5
இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகை பெறும் மாணவர்களின் குடும்ப வருமானம் ரூ.2.50 லட்சம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மாணவர் ஒருவருக்கு கல்வித் உதவித்தொகையாக சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம், இதர கட்டாய கட்டணம்  ஆகிய கட்டணங்களாக மாணவர்களால் செலுத்திய கட்டணம் ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வித் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

3 / 5
மாணவர்கள் கல்வித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது. https://bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பிங்களை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி உரிய முகவரிக்கு அனுப்பி வேண்டும். இல்லையென்றால், அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

4 / 5
பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம், சென்னை - 5 அல்லது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்திலே சென்று விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  ஏதேனும் விண்ணப்பம் தொடர்பான சந்தேகம் இருந்தால் உதவி எண்களான 044 29515942 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்கள் குறித்து கேட்டுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

5 / 5
Latest Stories