IND vs BAN 1st Test Highlights: சிக்கலில் இருந்து மீட்ட அஸ்வின், ஜடேஜா.. முதல் நாளில் இந்திய அணி 339 ரன்கள் குவிப்பு! - Tamil News | IND vs BAN 1st Test Highlights: Ashwin and Jadeja help india cross 300 plus runs against bangladesh | TV9 Tamil

IND vs BAN 1st Test Highlights: சிக்கலில் இருந்து மீட்ட அஸ்வின், ஜடேஜா.. முதல் நாளில் இந்திய அணி 339 ரன்கள் குவிப்பு!

Published: 

19 Sep 2024 18:54 PM

IND vs BAN: சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று காலை 9 மணிக்கு இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் நஸ்முல் ஹொசைன் சாண்டோ முதலில் பந்துவீச முடிவு செய்தார். அதன்பிறகு, பந்துவீச வந்த வங்கதேச பந்துவீச்சாளர் ஹசன் மஹ்மூத் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். அடுத்து உள்ளே வந்த கே.எல்.ராகுலும் 16 ரன்களுடன் ஏமாற்றம் அளிக்க, ஜெய்ஸ்வாலும் அரைசதம் அடித்து 56 ரன்களில் நஹித் ராணா பந்துவீச்சில் அவுட்டானார்.

1 / 6இந்தியா

இந்தியா - வங்கதேசம் இடையே சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது. அதன்படி, அஸ்வினின் சதத்தின் உதவியால் முதல் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்துள்ளது.

2 / 6

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று காலை 9 மணிக்கு இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் நஸ்முல் ஹொசைன் சாண்டோ முதலில் பந்துவீச முடிவு செய்தார். அதன்பிறகு, பந்துவீச வந்த வங்கதேச பந்துவீச்சாளர் ஹசன் மஹ்மூத் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.

3 / 6

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 6 ரன்களும், விராட் கோலி 6 ரன்களும், நீண்ட நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்பிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் 39 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்ப, சுப்மன் கில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

4 / 6

அடுத்து உள்ளே வந்த கே.எல்.ராகுலும் 16 ரன்களுடன் ஏமாற்றம் அளிக்க, ஜெய்ஸ்வாலும் அரைசதம் அடித்து 56 ரன்களில் நஹித் ராணா பந்துவீச்சில் அவுட்டானார். அப்போது இந்திய அணி 144 ரன்களுக்குள் 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

5 / 6

அதன்பிறகு ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் 7வது விக்கெட்டுக்கு 150 ரன்களின் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதன் மூலம் இந்தியாவின் ஸ்கோரும் 300 ரன்களை கடந்தது. இத்துடன் அஷ்வினும் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 6வது சதத்தை பதிவு செய்தார்.

6 / 6

இன்றைய நாள் ஆட்ட நேர முடிவில் அஸ்வின் 112 பந்துகளில் 10 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 102 ரன்களுடனும், ஜடேஜா 117 பந்துகளில் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 86 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச அணி தரப்பில் மஹ்மூத் அதிகபட்சமாக 4 விக்கெட்களும், நஹித் ராணா, மெஹ்தி ஹசன் மிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.

காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?
தமிழ்நாட்டின் நகரங்களும் அதன் புனைப் பெயர்களும்...
நடிகை டாப்ஸி பண்ணுவின் சினிமா பயணம்..!