5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs BAN T20 Squad: வங்கதேச டி20 தொடரில் விலகிய ஷிவம் துபே.. இளம் வீரரை அழைத்த பிசிசிஐ.. காரணம் என்ன..?

Shivam Dube: வங்கதேசத்துக்கு எதிரான போட்டிக்கு முந்தைய பயிற்சியின் போது ஷிவம் துபேவுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்திய டி20 அணியில் சிறந்த ஆல்ரவுண்டராக பார்க்கப்படும் ஷிவம் துபே இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து, துபே இல்லாத நிலையில், ஹர்திக் பாண்டியா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரை இந்திய அணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக களமிறக்கும்.

mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 05 Oct 2024 22:16 PM
அக்டோபர் 6ம் தேதியான நாளை முதல் இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்தநிலையில், டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஷிவம் துபேவுக்கு பதிலாக 21 வயதான பேட்ஸ்மேன் திலக் வர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

1 / 6
இந்தியா - வங்கதேசம் இடையிலான டி20 தொடர் அக்டோபர் 6 முதல் 12 வரை நடைபெறுகிறது. இதில், மித வேகப்பந்து வீச்சாளரும், இடது கை பேட்ஸ்மேனுமான ஷிவம் துபே முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

2 / 6
ஷிவம் துபே கடந்த சில மாதங்களாக இந்திய டி20 அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்து வருகிறார். மேலும், 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டிக்கு முந்தைய பயிற்சியின் போது ஷிவம் துபேவுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.

3 / 6
இந்திய டி20 அணியில் சிறந்த ஆல்ரவுண்டராக பார்க்கப்படும் ஷிவம் துபே இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து, துபே இல்லாத நிலையில், ஹர்திக் பாண்டியா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரை இந்திய அணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக களமிறக்கும்.

4 / 6
திலக் வர்மா இந்தியாவுக்காக இதுவரை 16 டி20 போட்டிகளில் விளையாடி 2 அரை சதங்கள் உள்பட 336 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், கடந்த 2024 ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா மொத்தம் 416 ரன்கள் எடுத்தார். மேலும், தற்போது சர்வதேச அளவில் முத்திரை பதிக்க திலக் வர்மாவுக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.

5 / 6
வங்கதேசத்திற்கு எதிரான இந்திய டி20  அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ், திலக் வர்மா.

6 / 6
Follow Us
Latest Stories