IND vs NZ 3rd Test Day 2 Highlights: முடிந்த 2வது நாள்! 9 விக்கெட்டுகளை இழந்த நியூசி.. அசத்திய இந்திய அணி! - Tamil News | IND vs NZ 3rd Test Day 2 Highlights: indian cricket team as New Zealand reach 171/9 in the 2nd innings | TV9 Tamil

IND vs NZ 3rd Test Day 2 Highlights: முடிந்த 2வது நாள்! 9 விக்கெட்டுகளை இழந்த நியூசி.. அசத்திய இந்திய அணி!

Published: 

02 Nov 2024 18:51 PM

IND vs NZ: போட்டியின் இரண்டாவது நாளான இன்று இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. இதனால், நியூசிலாந்து அனிக்கு எதிரான இந்திய அணி 28 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. அதேநேரம், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

1 / 6மும்பையில்

மும்பையில் நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 3வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

2 / 6

முன்னதாக, போட்டியின் இரண்டாவது நாளான இன்று இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. இதனால், நியூசிலாந்து அனிக்கு எதிரான இந்திய அணி 28 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. அதேநேரம், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

3 / 6

மும்பை டெஸ்டின் இரண்டாவது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக வில் யங் 51 ரன்கள் எடுத்திருந்தார். அதேசமயம், இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், ரவிசந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.

4 / 6

2வது நாள் தொடக்கத்தில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணி ஆட்டத்தை தொடங்கியது. அதன்பிறகு, இந்தியாவுக்காக நிதானமாக ஆடி சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அதன்பிறகு, இந்திய பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் பெவிலியன் திரும்பியதால், இந்திய அணி 263 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது.

5 / 6

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

6 / 6

நியூசிலாந்து: டாம் லாதம் (கேப்டன்), டுவைன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், இஷ் சோதி, மாட் ஹென்றி, அஜாஸ் படேல், வில்லியம் ஓ ரூர்க்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!