IND vs NZ Day 4 Highlights: நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் இலக்கு.. தடுத்து நிறுத்தி வெற்றி பெறுமா இந்திய அணி..? - Tamil News | IND vs NZ Day 4 Highlights: new zealand need 107 to win first test | TV9 Tamil

IND vs NZ Day 4 Highlights: நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் இலக்கு.. தடுத்து நிறுத்தி வெற்றி பெறுமா இந்திய அணி..?

Published: 

19 Oct 2024 22:55 PM

IND vs NZ: 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நான்காம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர். இன்றைய நாள் முடிய அரை மணிநேரம் இருந்த நிலையில், மங்கலான வெளிச்சம் காரணமாக போட்டி முடிவுக்கு வந்தது.

1 / 6பெங்களூரில்

பெங்களூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 46 ரன்களில் சுருண்டதை பொருட்படுத்தாமல், இரண்டாவது இன்னிங்ஸில் போராடிய இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது.

2 / 6

முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்குள் ஆல் அவுட்டான இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணிக்கு தகுந்த பதிலடி கொடுத்து 462 ரன்கள் குவித்தது. இந்திய அணி அதிகபட்சமாக சர்பராஸ் கான் 150 ரன்களும், ரிஷப் ப்ண்ட் 99 ரன்களும் எடுத்திருந்தனர்.

3 / 6

107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நான்காம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர். இன்றைய நாள் முடிய அரை மணிநேரம் இருந்த நிலையில், மங்கலான வெளிச்சம் காரணமாக போட்டி முடிவுக்கு வந்தது.

4 / 6

அப்போது, ​​நடுவரின் முடிவை எதிர்த்து இந்திய அணி வீரர்கள் மைதானத்தில் நடுவர்களுடன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் இந்த நேரத்தில் மழை பெய்ததால், 4 பந்துகள் வீசிய நிலையில், அனைத்து வீரர்களும் மீண்டும் பெவிலியன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

5 / 6

மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி 231 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து 4-வது நாள் ஆட்டத்தை தொடங்கியது. சர்பராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் கூட்டணி அமைத்து 177 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

6 / 6

நியூசிலாந்து தரப்பில் ஹென்றி, ரூர்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும், டிம் சவுதி மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்..?
முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?
கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி!
சாத்துக்குடியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?