Paris Olympic 2024: ஒலிம்பிக்கில் முதல் நாள் முக்கியமான நாள்.. இன்று 7 போட்டிகளில் களமிறங்கும் இந்தியா..! - Tamil News | India at Paris Olympics Day 1 Schedule | TV9 Tamil

Paris Olympic 2024: ஒலிம்பிக்கில் முதல் நாள் முக்கியமான நாள்.. இன்று 7 போட்டிகளில் களமிறங்கும் இந்தியா..!

Updated On: 

27 Jul 2024 11:04 AM

Olympics Day 1 Schedule: இன்று ஜூலை 27ம் தேதி இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 7 விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர். முதல் போட்டி பூப்பந்து. இந்த ஆட்டத்தில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடியும், பெண்கள் இரட்டையர் பிரிவில் அஷ்வினி பொன்னப்பா, தனிசா கிரெஸ்டோ ஜோடியும் களமிறங்கவுள்ளது. பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் எஸ்எஸ் பிரணாய் மற்றும் லக்ஷ்யா சென் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

1 / 7பாரிஸ்

பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளது. இன்று தொடங்கும் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தகுதிச்சுற்று மற்றும் லீக் போட்டிகளில் இருந்து தங்களது ஆட்டங்களை தொடங்குகின்றனர்.

2 / 7

ஜூலை 27ம் தேதி சனிக்கிழமையன்று இந்திய விளையாட்டு வீரர்கள் 7 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இதையடுத்து, எந்தெந்த போட்டிகளில் எந்தெந்த வீரர்கள் பங்கேற்கிறார்கள் என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம்.

3 / 7

முதலில் பூப்பந்தாட்டத்தில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடியும், பெண்கள் இரட்டையர் பிரிவில் அஷ்வினி பொன்னப்பா, தனிசா கிரெஸ்டோ ஜோடியும் களமிறங்குகின்றனர்.

4 / 7

பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் எஸ்எஸ் பிரனாய் மற்றும் லக்ஷ்யா சென் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல், டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிவி சிந்து பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கிறார்.

5 / 7

10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணிக்கான தகுதிச் சுற்று போட்டியில் சந்தீப் சிங், அர்ஜுன் பபூடா, ரமிதா ஜிண்டால், லெவெனில் வளரிவன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

6 / 7

டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா மற்றும் என் ஸ்ரீராம் பாலாஜி ஜோடி போட்டியிடுகிறார்கள். டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சரத் கமல் மற்றும் ஹர்மீத் தேசாய் பங்கேற்க உள்ளனர்.

7 / 7

இரவு 7 மணி முதல் பெண்களுக்கான 54 கிலோ குத்துச்சண்டை பிரிவில் 32-வது சுற்றில் ப்ரீத்தி பவார் பங்கேற்கிறார். தொடர்ந்து இரவு 9 மணிக்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, குரூப் பி பிரிவில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!