Team India: இந்திய அணி அடுத்ததாக யாருடன் எப்போது மோதுகிறது? முழு விவரம் இங்கே! - Tamil News | India Cricket Team Schedules: Here are the upcoming matches of Team India in tamil | TV9 Tamil

Team India: இந்திய அணி அடுத்ததாக யாருடன் எப்போது மோதுகிறது? முழு விவரம் இங்கே!

Published: 

03 Nov 2024 21:43 PM

India Cricket Team Schedules: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தத் தொடர் நவம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது.

1 / 6நியூசிலாந்து

நியூசிலாந்து டெஸ்ட் போட்டிக்கு பிறகு, இந்திய அணி அடுத்ததாக வருகின்ற நவம்பர் 8ம் தேதி முதல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதற்கு டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

2 / 6

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி நவம்பர் 8ம் தேதி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து, 2வது டி20 நவம்பர் 10ம் தேதி கெபெஹாராவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்காவிலும், 3வது டி20 நவம்பர் 13ஆம் தேதி செஞ்சுரியன் சூப்பர் ஸ்போர்ட்ஸ் பூங்காவிலும் நடைபெறவுள்ளது. 4வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

3 / 6

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தத் தொடர் நவம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது.

4 / 6

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 1வது டெஸ்ட் பெர்த் ஸ்டேடியத்தில் 22 நவம்பர் முதல் 26 நவம்பர் 2024 வரையிலும், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட்-அடிலெய்டு ஸ்டேடியத்தில் பகல்-இரவாக 6 முதல் 10 நவம்பர் 2024 வரையிலும், 3வது டெஸ்ட்- பிரிஸ்பேன் ஸ்டேடியத்தில் 14 முதல் 18 டிசம்பர் 2024 வரையிலும், 4வது டெஸ்ட் மெல்போர்ன் ஸ்டேடியத்தில் 26 முதல் 30 டிசம்பர் 2024 வரையிலும், 5வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னி ஸ்டேடியத்தில் 3 முதல் ஜனவரி 7 வரையிலும் நடைபெறவுள்ளது.

5 / 6

இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்ஷர் பட்டேல், ராமன்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷதீப் சிங், அர்ஷதீப் சிங். வைஷாக், அவேஷ் கான், யாஷ் தயாள்.

6 / 6

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்.) அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரஷித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

இரவில் டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்னையா?
தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவலாமா?
ஆரோக்கியமாக வாழ தினமும் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்..!
இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி செய்த டாப் 7 சாதனைகள்..!