IND vs PAK: கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மேஜிக்.. ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா..! - Tamil News | India defeats Pakistan 2-1 in the Asian Champions Trophy | TV9 Tamil

IND vs PAK: கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மேஜிக்.. ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா..!

Published: 

14 Sep 2024 17:24 PM

Asian Champions Trophy: ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் நடப்பு சாம்பியனான இந்தியாவுடன் சீனா, கொரியா, ஜப்பான், மலேசியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. இதில், இந்தியா இதுவரை 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் 5 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1 / 6ஆசிய

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தப் போட்டி சீனாவின் ஹுலுன்பியரில் உள்ள மோகி ஹாக்கி பயிற்சி தளத்தில் நடைபெற்றது.

2 / 6

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பெற்ற ஐந்தாவது வெற்றி இதுவாகும். இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இன்றைய ஹாக்கி போட்டியில் இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 2 கோல்களையும், பாகிஸ்தான் அணிக்காக அஹமட் நதீம் ஒரு கோலும் அடித்திருந்தனர்.

3 / 6

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா இதுவரை 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் 5 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

4 / 6

ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற 8வது வெற்றி இதுவாகும். ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இரு அணிகளும் இதுவரை 12 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளது. இதில், பாகிஸ்தான் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ள நிலையில், 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

5 / 6

ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் நடப்பு சாம்பியனான இந்தியாவுடன் சீனா, கொரியா, ஜப்பான், மலேசியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த போட்டியின் அரையிறுதிப் போட்டி வருகின்ற 16ம் தேதியும், இறுதிப் போட்டி செப்டம்பர் 17ம் தேதியும் நடைபெறவுள்ளது.

6 / 6

ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி நடப்பு சாம்பியனாக உள்ளது. இந்தியா நான்கு முறையும், பாகிஸ்தான் மூன்று முறையும் பட்டம் வென்றுள்ளன. அதேசமயம், கடந்த 202ம் ஆண்டு தென் கொரியா அணி முதன் முறையாக பட்டத்தை வென்றது.

Follow Us On
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version