இன்றைய நாளில் ஜஸ்பிரித் பும்ரா 152 ரன்கள் எடுத்திருந்த டிராவிஸ் ஹெட், 101 ரன்கள் எடுத்திருந்த ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, மிட்செல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதேநேரத்தில், முகமது சிராஜ் கேப்டன் பாட் கம்மின்ஸையும், நிதிஷ்குமார் ரெட்டி மார்னஸ் லாபுசாக்னேவை அவுட் செய்தனர்.