India vs Australia: சதத்துடன் பார்முக்கு திரும்பிய கோலி.. தோல்வியை நோக்கி ஆஸி.. கலக்கிய இந்திய வீரர்கள்..! - Tamil News | India vs Australia1st Test Day 3: india sets australia a target of 534 runs australia loss 3 wicket 12 runs | TV9 Tamil

India vs Australia: சதத்துடன் பார்முக்கு திரும்பிய கோலி.. தோல்வியை நோக்கி ஆஸி.. கலக்கிய இந்திய வீரர்கள்..!

Published: 

24 Nov 2024 17:51 PM

India vs Australia 1st Test, Day 3: இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி சிறப்பான தொடக்கத்தை தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்த பிறகு, கேஎல் ராகுல் 77 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

1 / 6பெர்த்தில்

பெர்த்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த போட்டியின் மூன்றாவது நாளான இன்றும் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 487 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற அபார இலக்கை நிர்ணயித்தது இந்திய அணி.

2 / 6

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தங்களஹு முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 104 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 46 ரன்களுக்கு முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

3 / 6

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி சிறப்பான தொடக்கத்தை தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்த பிறகு, கேஎல் ராகுல் 77 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

4 / 6

ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் அபாரமாக பேட்டிங் செய்து 297 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 161 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் களம் இறங்கிய துருவ் ஜூரல் (1), ரிஷப் பந்த் (1) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்தனர்.

5 / 6

பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய விராட் கோலி, 143 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 சதங்கள் அடித்த உலகின் 16வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். விராட் கோலியின் அபார சதத்தால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

6 / 6

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சில் வெற்றி பெற 534 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இரண்டாவது இன்னிங்ஸின் 4வது பந்தில் பும்ரா நாதன் மெக்ஸ்வீனியை (0) எல்பிடபிள்யூ செய்ய, பேட் கம்மின்ஸை முகமது சிராஜ் 2 ரன்களில் வெளியேற்றினார். மூன்றாவது நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் பும்ராவிடம் மார்னஸ் லாபுசேன் 3 ரன்களில் இழக்க, ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 12 ரன்களுடன் 3வது நாளை முடித்தது.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!