IND vs NZ: டெஸ்ட் வாழ்க்கையில் முதல்முறை.. தேவையில்லாத சாதனையை படைத்த அஸ்வின்..! - Tamil News | India vs New Zealand 1st Test: ravichandran ashwin conceded 20 runs in an over for the first time in his test career | TV9 Tamil

IND vs NZ: டெஸ்ட் வாழ்க்கையில் முதல்முறை.. தேவையில்லாத சாதனையை படைத்த அஸ்வின்..!

Published: 

18 Oct 2024 19:22 PM

Ravichandran Ashwin: முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக 134 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், பும்ரா, அஸ்வின் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

1 / 6பெங்களூரு

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நியூசிலாந்து எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இன்று இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா, கோலி, சர்பராஸ் கான் அரைசதம் கடந்தனர்.

2 / 6

முன்னதாக, முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக 134 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், பும்ரா, அஸ்வின் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

3 / 6

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வினுக்கு, பெங்களூரு டெஸ்ட் சிறப்பானதாக இல்லை. முதலில் பேட்டிங்கில் டக் அவுட்டான அஸ்வின், பந்துவீச்சிலும் தேவையற்ற சாதனையை தன் கணக்கில் பதிவு செய்துள்ளார்.

4 / 6

நியூசிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் பந்துவீசிய அஸ்வின் 16 ஓவர்கள் வீசி 5.87 என்ற எகானமியில் 94 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். இந்த போட்டியில் அஸ்வின் வீசிய ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். இது இவரது டெஸ்ட் வாழ்க்கையில் முதல் முறையாக தேவையற்ற சாதனையாக பதிவானது.

5 / 6

அதாவது, நியூசிலாந்து முதல் இன்னிங்ஸின்போது 80வது ஓவரை வீச அஸ்வின் வந்தார். இந்த ஓவரில் மொத்தமாக 20 ரன்களை விட்டுகொடுத்தார். அஸ்வின் வீசிய இந்த ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் பறந்தது குறிப்பிடத்தக்கது. ரவிச்சந்திரன் அஸ்வினின் சர்வதேச டெஸ்ட் வாழ்க்கையில் ஒரு ஓவரில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்தது இதுவே முதல்முறையாகும்.

6 / 6

இதற்கு முன்பு வரை, அஸ்வின் தனது டெஸ்ட் வாழ்க்கையில் ஒரு முறை கூட ஒரு ஓவரில் 17 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்ததில்லை. அஸ்வின் 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு 17 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைக் கொடுப்பது இதுவே முதல் முறையாகும். மேலும், இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 20வது முறையாக அஸ்வினால் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது.

தினசரி சாப்பிடும் காபி, டீயில் சர்க்கரை சேர்க்கவில்லை என்றால் என்ன ஆகும்?
பப்பாளி பழத்துடன் இந்த உணவு வகைகளை சேர்த்து சாப்பிடக்கூடாது!
அசத்தலான புதிய அம்சங்களை அறிமுகம் செய்த யூடியூப்!
பப்பாளியை அதிகமாக எடுத்துக்கொள்வதை ஏன் தவிர்க்க வேண்டும் தெரியுமா?