Rishabh Pant: அறுவை சிகிச்சை செய்த அதே கால்.. வலியுடன் வெளியேறிய ரிஷப் பண்ட்! - Tamil News | India vs New Zealand1st Test 2nd day Rishabh Pant goes off the field after blow to right knee | TV9 Tamil

Rishabh Pant: அறுவை சிகிச்சை செய்த அதே கால்.. வலியுடன் வெளியேறிய ரிஷப் பண்ட்!

Updated On: 

28 Oct 2024 12:41 PM

India vs New Zealand 1st Test: ரிஷப் பண்ட் காயம் ஏற்பட்டு காலில் வீக்கம் ஏற்பட்டதால், இவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இன்றைய நாள் முழுவதும் களமிறங்கி களத்தில் இருந்தார். ரிஷப் பண்ட் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் களத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.

1 / 6அக்டோபர்

அக்டோபர் 17ஆம் தேதி காலை பெங்களூரில் நடந்த சம்பவம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் என்றென்றும் நினைவில் நிற்கும். யாராலும் கணிக்க முடியாத அளவுக்கு முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்தின் கைகளில் இந்திய அணி இத்தகைய அவமானத்தை சந்திக்க நேரிட்டது. முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களுக்கு சுருண்டது.

2 / 6

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 180 ரன்களை எடுத்தது. இதன்மூலம், நியூசிலாந்து அணிக்கு 134 ரன்கள் மீதமுள்ளது. நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறினார்.

3 / 6

ரிஷப் பண்ட் காயம் ஏற்பட்டு காலில் வீக்கம் ஏற்பட்டதால், இவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இன்றைய நாள் முழுவதும் களமிறங்கி களத்தில் இருந்தார். ரிஷப் பண்ட் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் களத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.

4 / 6

ரிஷப் பண்ட் காயம் குறித்து ரோஹித் சர்மா கூறுகையில், “துரதிர்ஷடவசமாக பந்து நேராக சென்று, ரிஷப் பண்ட் அறுவை சிகிச்சை செய்த அதே காலின் முழங்கால் மூட்டில் பட்டது. இதனால், உடனடியாக அவருக்கு வீக்கம் ஏற்பட்டது. எனவே, முன்னெச்சரிக்கையாக அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். விரைவில் குணமடைவார் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

5 / 6

இன்றைய நாளில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது அனைவருக்கும் தெரியும். இதில், இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் மட்டுமே 20 ரன்கள் எடுத்திருந்தார். வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட், சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

6 / 6

கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிஷப் பண்ட், ஒரு அதிபயங்கர கார் விபத்தில் சிக்கினார். இதன்பிறகு, நீண்ட காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த இவர், இந்த ஆண்டு ஐபிஎல் மூலம் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்து, ஐசிசி டி20 உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!