Rohit Sharma: சச்சினின் சிறப்பு பட்டியலில் இணைந்த ரோஹித்.. வார்னரை பின்னுக்கு தள்ளி அசத்தல்..! - Tamil News | indian cricket team captain rohit sharma breakes david warners all time record | TV9 Tamil

Rohit Sharma: சச்சினின் சிறப்பு பட்டியலில் இணைந்த ரோஹித்.. வார்னரை பின்னுக்கு தள்ளி அசத்தல்..!

Published: 

03 Aug 2024 16:35 PM

India vs Srilanka: இலங்கைக்கு எதிரான நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பெட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி 47.5 ஓவரில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில் முடிந்தது.

1 / 7கொழும்பில்

கொழும்பில் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் தனது மூன்றாவது சிக்ஸரை அடித்து, சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். ரோஹித் சர்மா இதுவரை மொத்தம் 124 சர்வதேச போட்டிகளில் கேப்டனாக விளையாடியுள்ளார். இதில், தற்போது அவர் பெயரில் 234 சிக்சர்கள் உள்ளன.

2 / 7

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரும், கேப்டனுமான ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். இதன்மூலம், ஆஸ்திரேலிய தொடக்கவீரர் டேவிட் வார்னரின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.

3 / 7

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ரோஹித் சர்மா 47 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகள் உதவியுடன் 58 ரன்கள் குவித்தார். இந்த 58 ரன்கள் எடுத்ததன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 15 ஆயிரம் ரன்களை கடந்த 10வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை ரோஹித் சர்மா பெற்றார்.

4 / 7

மேலும், தொடக்க வீரராக அதிவேகமாக 15 ஆயிரம் ரன்களை கடந்த உலகின் 2வது பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா படைத்தார். முன்னதாக, இந்த சாதனையை ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் வைத்திருந்தார்.

5 / 7

ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவங்களிலும் தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர், 361 இன்னிங்ஸ்களில் 15 ஆயிரம் ரன்களை கடந்து, உலகின் இரண்டாவது தொடக்க வீரர் என்ற பெருமையை பெற்றார்.

6 / 7

தற்போது டேவிட் வார்னரை பின்னுக்கு தள்ளி ரோஹித் சர்மா 2வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணிக்காக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்றிலும் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா, வெறும் 352 இன்னிங்சில் 15 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம், வார்னர் சாதனையை முறியடித்து, அதிவேகமாக 15,000 ரன்களை கடந்த உலகின் 2வது தொடக்க வீரர் என்ற சாதனையை படைத்தார்.

7 / 7

இந்த பட்டியலில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்கிய சச்சின், வெறும் 331 இன்னிங்ஸில் 15,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ரன்களை கடந்த தொடக்க வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

Follow Us On
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
Exit mobile version