Ravindra Jadeja: பாஜகவில் இணைந்தார் ஜடேஜா.. கிரிக்கெட்டை தொடர்ந்து அரசியலில் களம்! - Tamil News | Indian Cricketer Ravindra Jadeja joins BJP, wife Rivaba Jadeja shares membership card | TV9 Tamil

Ravindra Jadeja: பாஜகவில் இணைந்தார் ஜடேஜா.. கிரிக்கெட்டை தொடர்ந்து அரசியலில் களம்!

Published: 

05 Sep 2024 21:18 PM

BJP: ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஏற்கனவே, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் பாஜக எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜடேஜா மனைவி ரிவாபா 5 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். கடந்த 2022 ம் ஆண்டு பாஜக கட்சி அவரை ஜாம்நகர் சட்டமன்றத் தொகுதியில் நிறுத்தியது. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

1 / 7இந்திய

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்துள்ளார். குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இருந்து பாஜக சார்பில் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிவாபா ஜடேஜா, சமூக வலைதளங்களில் உறுப்பினர் எண்ணுடன் தானும் தனது கணவரும் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

2 / 7

தனது எம்எல்ஏ மனைவியைப் போலவே இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவும் பாஜகவில் உறுப்பினராகியுள்ளார். ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஏற்கனவே, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் பாஜக எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 / 7

ஜடேஜா மனைவி ரிவாபா 5 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். கடந்த 2022 ம் ஆண்டு பாஜக கட்சி அவரை ஜாம்நகர் சட்டமன்றத் தொகுதியில் நிறுத்தியது. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

4 / 7

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்கு பிறகு கோலி, ரோஹித்துடன் ஜடேஜாவும் டி20யில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

5 / 7

கடந்த குஜராத் தேர்தலின்போது ஜடேஜா தனது மனைவி ரிவாபாவுடன் பலமுறை பிரச்சாரம் செய்துள்ளார். விரைவில் இவர் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, முழு அரசியலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 / 7

இந்திய அணிக்காக ரவீந்திர ஜடேஜா இதுவரை 72 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3036 ரன்களுடன், 294 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேபோல், 197 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2756 ரன்களும் 220 விக்கெட்டுகளும், 74 டி-20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 515 ரன்கள் மற்றும் 54 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

7 / 7

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் செப்டம்பர் 19-ம் தேதி முதல் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow Us On
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version