இந்திய ஓட்டுநர் உரிமத்தை வெளிநாடுகளில் பயன்படுத்தலாமா? ரூல்ஸ் இதுதான்! - Tamil News | Indian driving licence can be used in 12 foreign countries details in Tamil | TV9 Tamil

இந்திய ஓட்டுநர் உரிமத்தை வெளிநாடுகளில் பயன்படுத்தலாமா? ரூல்ஸ் இதுதான்!

Published: 

04 Nov 2024 11:01 AM

Indian Driving Licence in Abroad: வெளிநாட்டுக்குச் செல்ல திட்டமிட்டு இருக்கிறீர்களா? பயணத்தின் போது வெளிநாடுகளிலும் கார் அல்லது பைக் ஓட்ட விரும்பினால் ஓட்டுநர் உரிமம் தேவைப்படும். ஆனால் உங்களிடம் இந்திய ஓட்டுனர் உரிமம் இருக்கும். இது வெளிநாடுகளில் பயன்படுத்த முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். ஆனால் குறிப்பிட்ட சில நாடுகளில் இந்திய ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்தி வாகனம் ஓட்டலாம்.

1 / 6நீங்கள்

நீங்கள் அமெரிக்கா செல்கிறீர்கள் என்றால் அங்கு இந்திய ஓட்டுனர் உரிமத்தை ஒரு வருடத்திற்கு பயன்படுத்தலாம். மலேசியா மற்றும் கனடாவில் உங்கள் இந்திய ஓட்டுனர் உரிமத்தை மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம். ஜெர்மனி மற்றும் ஸ்பெயினில் இந்திய ஓட்டுனர் உரிமம் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும்.

2 / 6

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, தென்னாபிரிக்கா, ஸ்வீடன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இந்திய ஓட்டுனர் உரிமத்தை வைத்து ஒரு வருடத்திற்கு வாகனம் ஓட்டலாம்.

3 / 6

மேலே குறிப்பிட்டுள்ள நாடுகளில் இந்திய ஓட்டுனர் உரிமம் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு வாகனம் ஓட்டலாம் ஆனால் இதற்கு உங்களிடம் சர்வதேச ஓட்டுனர் அனுமதி இருப்பது கட்டாயம் ஆகும். வெளிநாடு செல்வதற்கு முன் இதற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

4 / 6

RTO அல்லது சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று படிவம் 1A (மருத்துவ உடற்பகுதி படிவம்) மற்றும் படிவம் 4A ஆகியவற்றை நிரப்ப வேண்டும். படிவத்தை பூர்த்தி செய்த பின்னர் ஓட்டுநர் உரிமம், அடையாளச் சான்று மற்றும் முகவரி சான்று போன்ற தேவையான தகவல்களை வழங்க வேண்டும்

5 / 6

படிவத்தை பூர்த்தி செய்து தேவையான தகவல்களை வழங்கிய பிறகு, நீங்கள் ஆவணங்கள் மற்றும் படிவங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். இதன் பிறகு நீங்கள் சர்வதேச ஓட்டுனர் அனுமதிக்கான‌ ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

6 / 6

ஓட்டுநர் அனுமதிச்சீட்டுக்கு ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும்.‌ தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு உங்களுக்கு சர்வதேச ஓட்டுனர் அனுமதி வழங்கப்படும். அதன் உதவியுடன் மேலே குறிப்பிட்ட நாடுகளில் நீங்கள் எளிதாக வாகனங்கள் ஓட்ட முடியும்.

அவரைப் போல இருக்க வேண்டும் - நடிகை பார்வதியின் ஆசை
நயன்தாராவிற்கு சன் டிவியின் இந்த சீரியல் பிடிக்குமாம்
இரவில் டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்னையா?
தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவலாமா?