5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Manu Bhaker Struggle Story: வாடகை துப்பாக்கியுடன் நேஷனல் போட்டியில் களம்.. மனு பாக்கரின் போராட்ட கதை!

Manu Bhaker: ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர், மற்ற விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் துப்பாக்கி சுடுதல் மட்டுமின்றி கிக் பாக்ஸிங் மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். வீரேந்திர சேவாக்கின் ஜஜ்ஜார் கிரிக்கெட் அகாடமியில் இணைந்து கிரிக்கெட்டும் கற்று கொண்டுள்ளார்.

mukesh-kannan
Mukesh Kannan | Published: 28 Jul 2024 17:49 PM
மனு பாக்கர் பெயர் தற்போது இந்தியா முழுவதும் ஒலித்து வருகிறது. அதற்கு காரணம், பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

1 / 7
பாரிஸ் ஒலிம்பிக் 2024ல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் மனு பாக்கர். இதன்மூலம், ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றார்.

2 / 7
ஒலிம்பிற்கு முன்னதாக செய்தி நிறுவனத்திடம் பேசிய மனு பாக்கர் தனது போராட்ட வாழ்க்கையை பற்றி பேசினார். அதில் மனு பாக்கர் னது முதல் தேசிய போட்டியை வாடகை துப்பாக்கியுடன் விளையாடியதாக கூறினார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

3 / 7
இதுகுறித்து பேசிய மனு பாக்கர், “ஆரம்பத்தில் என்னிடம் சொந்த கைத்துப்பாக்கி இல்லாதபோது, ​​வினீத் சாரின் கைத்துப்பாக்கியை வாடகைக்கு வாங்கினேன்.  அதில், ட்ரிக்கர் எவ்வளவு கீழே இருக்க வேண்டும் என்று கூட எனக்குத் தெரியவில்லை. பிடியை எடுப்பதிலும் நிறைய சிரமம் இருந்தது.” என்று தெரிவித்தார்.

4 / 7
ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நெருங்கிக் கொண்டிருந்தபோது, மனுவின் பயிற்சிக்காக கைத்துப்பாக்கியும், அதற்கான லைசென்ஸும் தேவைப்பட்டது. இதன் மனுவின் தந்தை ராம்கிஷன் பாகர் உரிமம் பெற தினமும் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜஜ்ஜாருக்கு சென்று வந்துள்ளார்.

5 / 7
அப்போதும் உரிமம் கிடைக்காத நிலையில் மனுவின் தந்தை ஹரியானா கல்வி அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார். தொடர்ந்து ஹரியானா முதலமைச்சர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருக்கு ட்வீட் செய்து, இரண்டு மாதங்களுக்குப் பிறகு அனுமதி கிடைத்துள்ளது.

6 / 7
மனு பாக்கர் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் துப்பாக்கி சுடுதல் மட்டுமின்றி கிக் பாக்ஸிங் மற்றும்  கிரிக்கெட் உள்ளிட்ட பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். வீரேந்திர சேவாக்கின் ஜஜ்ஜார் கிரிக்கெட் அகாடமியில் இணைந்து கிரிக்கெட்டும் கற்று கொண்டுள்ளார்.

7 / 7
Latest Stories