Train Ticket Booking: ரயில் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்.. என்ன தெரியுமா? - Tamil News | Indian Railways brings new rules as it reduces advance booking window to 60 days from 120 days tamil news | TV9 Tamil

Train Ticket Booking: ரயில் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்.. என்ன தெரியுமா?

Updated On: 

17 Oct 2024 16:52 PM

ரயில் டிக்கெட்: ரயில் டிக்கெட்டை முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கான காலத்தை 60 நாட்களாக குறைத்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ரயிலில் முன்பதிவு செய்ய 120 நாட்களில் இருந்த நிலையில், 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 / 5நாட்டில்

நாட்டில் மிக முக்கியமான அனைத்து தரப்பு மக்களும் பயணிக்கக்கூடிய பொது போக்குவரத்தாக ரயில் சேவை இருக்கிறது. குறைந்த அளவில் டிக்கெட் nஇருப்பது மற்றும் படுக்கையுடன் இருப்பதால் சமானிய மக்கள் ரயிலில் பயணிப்பதை தேர்வு செய்கின்றனர். இதனால், ரயில்வே துறையை மேம்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், பல்வேறு ரயில்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.

2 / 5

பண்டிகை காலங்களில் மக்களின் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களையும் ரயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது. ஆனால், ரயில்களில் டிக்கெட் ரயிலில் டிக்கெட் கிடைப்பது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை. குறிப்பாக, தீபாவளி, பொங்கல், புத்தாணடு என பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாகவே இருக்கும்.

3 / 5

இதனால், ரயிலில் பயணிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே பயணிகள் டிக்கெட் புக் செய்து வருகின்றனர். ரயிலில் பொதுவாக 120 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் இருக்கிறது. இந்த நிலையில் தான் அதில் சில அதிரடி மாற்றங்களை ரயில்வே வாரியம் செய்துள்ளது. இது பயணிகளுக்கு சீரமத்தை தரும் என்று கூறப்படுகிறது. அதாவது, பண்டிகை காலங்களில் பயணிகள் 120 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து வருகின்றனர்.

4 / 5

இந்த நிலையில் தான் ரயில் முன்பதிவு செய்வதில் ரயில்வே வாரியம் மாற்றம் செய்துள்ளது. அதன்படி, ரயில் டிக்கெட்டை முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கான காலத்தை 60 நாட்களாக குறைத்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ரயிலில் முன்பதிவு செய்ய 120 நாட்களில் இருந்த நிலையில், 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 / 5

மேலும், வெளிநாட்டு பயணிகளுக்கு 365 நாட்கள் என்ற கால அளவில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டள்ளது. கோமதி எக்ஸ்பிரஸ் மற்றும் தாஜ் எக்ஸ்பிரஸ் போன்ற குறைந்த ARP கொண்ட ரயில்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படாது. எனவே, பயணிகள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப தங்கள் பயணத் திட்டங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏன் வயிற்று உப்பசம் ஏற்படுது தெரியுமா?
தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...
நடிகை மடோனாவின் நியூ ஆல்பம்..!
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாரு தெரியுமா..?