Indigo: இனி ஜாலியா பறக்கலாம்.. மாணவர்களுக்கு இண்டிகோ அளித்த சூப்பர் ஆஃபர்! - Tamil News | IndiGo announced student special program offers discounts on flight tickets and extra baggage allowance | TV9 Tamil

Indigo: இனி ஜாலியா பறக்கலாம்.. மாணவர்களுக்கு இண்டிகோ அளித்த சூப்பர் ஆஃபர்!

Published: 

24 Nov 2024 11:11 AM

Flight Travel: பலருக்கும் விமானத்தில் செல்ல வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாகும். ஆனால் பொருளாதார பிரச்னை அதற்கு தடையாக இருக்கும். இண்டிகோ நிறுவனம் தற்போது அளித்துள்ள சலுகை நிச்சயம் மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என பலரும் தெரிவித்துள்ளனர்.

1 / 6மாணவர்கள்

மாணவர்கள் மிகவும் மலிவாகவும் வசதியாகவும் விமான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக நாட்டின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ சிறப்பு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

2 / 6

அதன்படி விமான பயணத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'ஸ்டூடன்ட் ஸ்பெஷல்' என்ற திட்டத்தைக் அறிமுகம் செய்துள்ளது. IndiGo நிறுவனத்தின் இணையதளம் மற்றும் செயலி மூலம் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது மாணவர்களுக்கு சிறப்பு கட்டணங்கள் மற்றும் கூடுதல் சலுகைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 / 6

இண்டிகோவின் இந்த புதிய பயணத் திட்டத்தின் கீழ், மாணவர்கள் தங்கள் விமான டிக்கெட்டின் அடிப்படைக் கட்டணத்தில் 6 சதவீதம் வரை தள்ளுபடியும், கூடுதல் 10 கிலோ லக்கேஜூம் கொண்டு செல்ல அனுமதியும் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 / 6

இந்த மாணவர் சிறப்பு சலுகை மூலம் கோவா, மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் போன்ற பிரபலமான நகரங்கள் உட்பட 80 க்கும் மேற்பட்ட உள்நாட்டு இடங்களுக்கு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 / 6

இந்த புதிய முயற்சியானது மாணவர்கள் தங்கள் பயணத்தின் போது நிகழும் தனித்துவமான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் விமானப் பயணத்தை மேலும் எளிதாக அணுகக்கூடியதாகவும், மன அழுத்தமில்லாததாகவும் மாற்றுகிறது.

6 / 6

இந்தச் சலுகை 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். மேலும் விமான நிலையத்தில் செக்-இன் செய்யும் போது பள்ளி/பல்கலைக்கழக ஐடி போன்றவை எடுத்துச் செல்ல வேண்டும். ஒருவேளை நீங்கள் ஐடியை சமர்பிக்கவில்லை என்றால் வழக்கமான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று இண்டிகோ தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்