பொதுவாக சாண்டா கிளாஸ் சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்திருப்பார். ஆனால் ஆரம்ப காலத்தில் பச்சை, அடர் ஊதா, நீலம் போன்ற நிறங்களிலும் உடை அணிந்து இருந்தார். இத்தனை நிறங்களில் உடையணிந்த சாண்டா கிளாஸ் இப்பொழுது ஏன் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களிலேயே உடை அணிகிறார் தெரியுமா? 1930 ஆம் ஆண்டு கோகோ கோலா நிறுவனம் செய்த விளம்பரத்தில் சாண்டா கிளாஸ்ஐ பயன்படுத்தியது. கோக்கோ கோலாவின் நிறம் சிவப்பு மற்றும் வெள்ளை என்பதால் அதே நிறத்தில் சாண்டா கிளாஸ் உடைகளுக்கு பயன்படுத்தியது. தயாரிப்புகளில் பின்பு அது மிகவும் பிரபலமடைந்து இன்று வரை அதே நிறம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.