சாண்டா கிளாஸ் கற்பனை பாத்திரமா? கிறிஸ்துமஸ் சுவாரஸ்ய தகவல்கள்! - Tamil News | Interesting facts about Christmas details in tamil | TV9 Tamil

சாண்டா கிளாஸ் கற்பனை பாத்திரமா? கிறிஸ்துமஸ் சுவாரஸ்ய தகவல்கள்!

Updated On: 

23 Nov 2024 17:39 PM

Interesting Facts about Christmas: உலகம் முழுவதும் இருக்கும் கிறிஸ்தவர்களால் கோலாலமாக கொண்டாடப்படும் பண்டிகை கிறிஸ்துமஸ். நட்சத்திரம், கிறிஸ்துமஸ் மரம், அலங்காரம், சாண்டா கிளாஸ், பாடல்கள் என அந்த பண்டிகை கலைக்கட்டும். கிறிஸ்மஸ் தொடர்பான சில சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

1 / 5கிறிஸ்துமஸை

கிறிஸ்துமஸை ஆங்கிலத்தில் சுருக்கமாக X mas என்றும் எழுதுவது வழக்கம். ஆனால் ஆங்கிலத்தில் C என்ற எழுத்தில் தொடங்கும் வார்த்தை ஏன் சுருக்கத்தில் X என்று பயன்படுத்தப்படுகிறது? முதன்முதலாக 16ஆம் நூற்றாண்டில் தான் கிறிஸ்துமஸ்வின் சுருக்கமாக X mas‌ என்று பயன்படுத்தப்பட்டது. இது ஒரு கிரேக்க சொல். எனவே கிரேக்கத்தில் கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை X என்ற எழுத்தில் தொடங்குகிறது. எனவே தான் X mas என்று பயன்படுத்தப்படுகிறது

2 / 5

சாண்டா கிளாஸ் கற்பனை கதாபாத்திரம் என்றே பலரும் நினைக்கின்றனர். ஆனால் செயின்ட் நிக்கோலஸ் என்ற பாதிரியாரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இவர் ஏழைகளுக்கும் குழந்தைகளுக்கும் ரகசியமாக பல பரிசு பொருள்களை கொடுத்து வந்தார். இவரைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப் பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. டச்சில் இவரை சின்டர் கிளாஸ் என்று அழைத்தனர். அதுவே தற்பொழுது சாண்டா கிளாஸ் என்று மாறியது.

3 / 5

பொதுவாக சாண்டா கிளாஸ் சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்திருப்பார். ஆனால் ஆரம்ப காலத்தில் பச்சை, அடர் ஊதா, நீலம் போன்ற நிறங்களிலும் உடை அணிந்து இருந்தார். இத்தனை நிறங்களில் உடையணிந்த சாண்டா கிளாஸ் இப்பொழுது ஏன் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களிலேயே உடை அணிகிறார் தெரியுமா? 1930 ஆம் ஆண்டு கோகோ கோலா நிறுவனம் செய்த விளம்பரத்தில் சாண்டா கிளாஸ்ஐ பயன்படுத்தியது. கோக்கோ கோலாவின் நிறம் சிவப்பு மற்றும் வெள்ளை என்பதால் அதே நிறத்தில் சாண்டா கிளாஸ் உடைகளுக்கு பயன்படுத்தியது. தயாரிப்புகளில் பின்பு அது மிகவும் பிரபலமடைந்து இன்று வரை அதே நிறம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

4 / 5

உலகம் முழுவதும் ஒரே நாளில் விடுமுறை அளிக்கும் ஒரே பண்டிகை கிறிஸ்துமஸ். ஆனால் முதல்முறையாக பண்டிகைக்கு விடுமுறை விட்டது என்று தெரியுமா? அமெரிக்காவின் அலாபமா மாகாணத்தில் தான் முதன்முதலாக 1836 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

5 / 5

கிறிஸ்துமஸ் காலங்களில் பாடப்படும் ஜிங்கிள் பெல்ஸ் பாடல் தான் விண்வெளியில் இசைக்கப்பட்ட முதல் பாடல் ஆகும். 1965 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி விண்வெளி வீரர்களான வாலி சிர்ரா மற்றும் தாமஸ் பி. ஸ்டாஃபோர்ட் ஆகியோரால் இசைக்கப்பட்டது.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?