கிறிஸ்மதுஸ் மரங்களைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்! - Tamil News | Interesting facts about different christmas tree details in tamil  | TV9 Tamil

கிறிஸ்மதுஸ் மரங்களைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்!

Published: 

22 Nov 2024 09:06 AM

Interesting facts about Christmas Tree: உலகம் முழுவதும் கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படும் பண்டிகை கிறிஸ்துமஸ். இந்த பண்டிகையின் போது கிறிஸ்துமஸ் மரம் தவிர்க்க முடியாத ஒன்றாகும். உலகில் பல இடங்களில் பல்வேறு விதமான கிறிஸ்துமஸ் மரங்கள் அமைக்கப்பட்டு உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது.

1 / 6மிக

மிக உயரமான 221 அடி கிறிஸ்துமஸ் மரம் டக்லெஸ் ஃபிர்‌ மரத்தில் 1950 ஆம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள நார்த் கேட் வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்டது.

2 / 6

237 அடி உயரம் உடைய செயற்கை கிறிஸ்துமஸ் மரமானது இலங்கையில் கொழும்பு நகரில் அலங்கரிக்கப்பட்டது. உலகின் உயரமான செயற்கை கிறிஸ்துமஸ் மரமாக இந்த மரத்தை தான் குறிப்பிடுகின்றனர்.

3 / 6

2007 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் ரியோ டீ ஜெனரியோவில் 85 மீட்டர் உயரம் உடைய மிகப்பெரிய மிதக்கும் கிறிஸ்மஸ் மரமானது 2.8 மில்லியன் மைக்ரோ விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது

4 / 6

2010 ஆம் வருடம் பெல்ஜியம் நாட்டில் மேல்மடி என்கிற இடத்தில் வைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரமானது ஏறத்தாழ 19,462 வண்ண விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்ட சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

5 / 6

2010 ஆம் ஆண்டு வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் அமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரமானது 181 நகைகளினால் அலங்கரிக்கப்பட்ட விலை உயர்ந்த கிறிஸ்துமஸ் மரமாக கருதப்படுகின்றது

6 / 6

1886 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட 12 இன்ச் உயரம் உடைய கிறிஸ்துமஸ் மரம் தான் மிகப் பழமையான கிறிஸ்துமஸ் மரமாக கூறப்படுகின்றது. இங்கிலாந்தை சேர்ந்த ஜேனட் பார்க்கர் என்பவரே இந்த பழமையான அழகிய கிறிஸ்துமஸ் மரத்தின் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!