International Yoga Day: யோகா செய்வதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? - Tamil News | | TV9 Tamil

International Yoga Day: யோகா செய்வதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

Published: 

21 Jun 2024 17:12 PM

International Yoga Day: உலகம் முழுவதும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை யோகா தினமாக அறிவிக்க 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐநாவிற்கு கோரிக்கை விடுத்தார். இதை 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐநா ஏற்று ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. அதன்படி 2015 ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. யோகா செய்வதன் மூலம் நம் உடலுக்கு பல வித நன்மைகள் கிடைக்கிறது.

1 / 6யோகா

யோகா தினசரி செய்து வந்தால் உடலில் நல்ல மாற்றம் தென்படும். குறிப்பாக உடலில் நெகிழும் தன்மை அதிகரிக்கும். முக்கியமாக நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றும் காரணத்தால் உடலில் ஏற்படும் வலிகளை நீக்க உதவும்

2 / 6

யோகா செய்வதன் மூலம் உடல் வலிமை அதிகரிக்கக்கூடும். அதே சமயம் உடல் எடையை குறைக்கவும் உதவும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம்.

3 / 6

யோகா செய்வதன் மூலம் நம்முடைய மன சோர்வு குறைகிறது. அத்துடன் உடலுக்கும் மனதிற்கும் ஒரு புத்துணர்வு கிடைக்கிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது.

4 / 6

உடல் பருமனாக இருப்பவர்கள் தீவிர உடற்பயிற்சி மேற்கொள்வதில் சற்று சிக்கல் இருக்கும். அப்படி இருப்பவர்கள் யோகா பயிற்சி மேற்கொள்ளலாம். அப்படி யோகாசனம் செய்வதன் மூலம் உடல் எடை குறையும் .

5 / 6

தினமும் மூச்சு பயிற்சி ஒன்றை செய்வதன் மூலம் முதலில் உங்கள் சுவாசப்பாதை சீராகிறது. நுரையீரலுக்கு முழுமையான சுவாசம் கிடைத்தாலே உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை உண்டாவதில்லை

6 / 6

யோகா செய்வது தன்னம்பிக்கையை அதிகரித்து உடலில் மாற்றங்களை வழங்குகிறது. அதே நேரத்தில் மனதையும் உடலையும் புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும் திறன் யோகாசனத்திற்கு அதிகம் உள்ளது

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!