Indian 2: இந்தியன் 2 படம் ஏன் பார்க்க வேண்டும்? – இதை கொஞ்சம் படிங்க! - Tamil News | Indian 2, Indian 2 Updates, Kamal Haasan, Director Shankar, Anirudh Ravinchandar | TV9 Tamil

Indian 2: இந்தியன் 2 படம் ஏன் பார்க்க வேண்டும்? – இதை கொஞ்சம் படிங்க!

Published: 

11 Jul 2024 12:04 PM

Kamal Haasan: தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு படத்தின் 2 ஆம் பாகம் எடுக்கும் போது அதனுடைய 3 ஆம் பாகமும் உருவாகியுள்ளது. 2 ஆம் பாகம் முடிவில் இந்தியன் 3க்கான ட்ரெய்லர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இயக்குனர் ஷங்கர் முதல் முறையாக அனிருத் உடன் இணைந்துள்ளார்.

1 / 6பெரும்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்தியன் 2 படம் நாளை (ஜூலை 12) உலகமெங்கும் ரிலீசாகிறது.28 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் கமல்-ஷங்கர் கூட்டணியில் அமைந்த படம் வெளிவர போகிறது. அதுவும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் 2 ஆம் பாகம் என்பதால் பலருக்கும் இப்படம் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

2 / 6

சமூகத்தில் நடக்கும் அவலங்களை சினிமாவில் தட்டி கேட்டால் அப்படம் ஹிட் என்பது எழுதப்படாத விதி. அப்படி பார்க்கையில் இந்தியன் முதல் பாகம் தமிழ்நாட்டில் நடப்பது போல இருந்தது. 2 ஆம் பாகம் இந்திய அளவில் நடக்கும் ஊழலை பேசப் போகிறது.

3 / 6

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு படத்தின் 2 ஆம் பாகம் எடுக்கும் போது அதனுடைய 3 ஆம் பாகமும் உருவாகியுள்ளது. 2 ஆம் பாகம் முடிவில் இந்தியன் 3க்கான ட்ரெய்லர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 / 6

தமிழக அரசியலில் ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் கமல்ஹாசன் வெளிப்படையான அரசியல் பேசி சமீப காலங்களில் நடிக்கவில்லை.அப்படி இருக்கையில் இந்தியன் 2 படத்தில் அவர் என்ன அரசியல் பேசுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

5 / 6

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் 5 ஆண்டுகளுக்கு பின் படம் இயக்கியுள்ளார். அதுவும் முதல்முறையாக தான் இயக்கிய ஒரு படத்தின் 2 ஆம் பாகத்தை உருவாக்கியுள்ளார்.

6 / 6

இயக்குனர் ஷங்கர் முதல் முறையாக அனிருத் உடன் இணைந்துள்ளார். பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த கூட்டணி எப்படி இருக்க போகிறது என்பது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!