Mumbai indians: ரோஹித் சர்மா உள்பட 4 வீரர்களை கழட்டிவிடுகிறதா மும்பை இந்தியன்ஸ்? அடுத்த கேப்டன் யார்? - Tamil News | IPL 2025: 4 key players including Rohit Sharma likely to be released from Mumbai Indians | TV9 Tamil

Mumbai indians: ரோஹித் சர்மா உள்பட 4 வீரர்களை கழட்டிவிடுகிறதா மும்பை இந்தியன்ஸ்? அடுத்த கேப்டன் யார்?

Updated On: 

12 Nov 2024 16:03 PM

IPL 2025: மெகா ஏலத்திற்கு முன் சூர்யகுமார் யாதவை தக்கவைத்துக்கொண்டு அடுத்த சீசனுக்கான புதிய கேப்டனை மும்பை இந்தியன்ஸ் நியமிக்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகியோரையும் தக்கவைத்துக் கொள்ள அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

1 / 7ஐபிஎல்

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும், விடுவிக்கும் என்ற கேள்வி அனைவரது மனதிலும் ஓடிக்கொண்டு இருக்கிறது.

2 / 7

ஐபிஎல் 2025க்கு முன்னபாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோஹித் சர்மா மட்டுமின்றி ஹர்திக் பாண்டியாவும் விடுவிக்கப்படலாம் என சமூக வலைதளங்களில் தற்போது கூறப்பட்டு வருகிறது.

3 / 7

ஐபிஎல் 2024ன்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. அதை தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி ரோகித் சர்மாவின் கையை விட்டு ஹர்திக் கைக்கு சென்றது.

4 / 7

இதன் காரணமாக கடந்த சீசனில் ரோஹித் சர்மாவுக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையில் முட்டி கொண்டது. இதற்கிடையில், ஹர்திக் பாண்டியாவுக்கும், ரோஹித் சர்மாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

5 / 7

இந்தநிலையில், தற்போது ரோஹித் சர்மா மட்டுமின்றி ஹர்திக் பாண்டியாவும் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இவர்களைத் தவிர தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிம் டேவிட் ஆகியோரும் நீக்கப்படலாம்

6 / 7

ரோஹித், ஹர்திக் உள்ளிட்ட 4 வீரர்களை விடுவிப்பது குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன. மறுபுறம், மெகா ஏலத்திற்கு முன் சூர்யகுமார் யாதவை தக்கவைத்துக்கொண்டு அடுத்த சீசனுக்கான புதிய கேப்டனை மும்பை இந்தியன்ஸ் நியமிக்கலாம்.

7 / 7

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகியோரையும் தக்கவைத்துக் கொள்ள அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

30 வயதுக்கு பிறகும் முகத்தில் முகப்பரு எதனால் ஏற்படுகிறது..?
பெற்றோரிடம் குழந்தைகள் ரகசியமாக தெரிந்து கொள்ளும் விஷயங்கள்!
நீங்கள் வேலை பார்க்கும் இடம் சரியானதா? - அறிய டிப்ஸ் இதோ!
இரவில் தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள்..!