MS Dhoni: ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா இல்லையா? அனுமதிக்காக மும்பை செல்லும் சிஎஸ்கே நிர்வாகிகள்! - Tamil News | IPL 2025 MS Dhoni Uncaped Player: MS Dhoni meeting Chennai Super Kings officials | TV9 Tamil

MS Dhoni: ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா இல்லையா? அனுமதிக்காக மும்பை செல்லும் சிஎஸ்கே நிர்வாகிகள்!

Published: 

05 Oct 2024 21:33 PM

CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோனியின் ஆட்டம் குறித்து தெளிவற்ற அறிக்கை ஒன்றை தெரிவித்திருந்தார். அதில், தோனி அடுத்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை என கூறியிருந்தார். அடுத்த சீசனில் விளையாடுவாரா என்பது குறித்து சிஎஸ்கே நிர்வாகிகள் சிலர் விரைவில் தோனியை நேரில் சென்று ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

1 / 6ஐபிஎல்

ஐபிஎல் 2025ல் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா இல்லையா என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை. அன் கேப்டு வீரராக களமிறங்குவார் என்று கூறப்பட்டாலும், தொடர்ந்து விளையாடுவது குறித்து இன்னும் தோனி எதையும் தெரியவில்லை. எனவே, தோனியின் ஆட்டத்தை காண முடியுமா என கிரிக்கெட் உலகம் ஆர்வமாக உள்ளது.

2 / 6

சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோனியின் ஆட்டம் குறித்து தெளிவற்ற அறிக்கை ஒன்றை தெரிவித்திருந்தார். அதில், தோனி அடுத்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை என கூறியிருந்தார்.

3 / 6

அடுத்த சீசனில் விளையாடுவாரா என்பது குறித்து சிஎஸ்கே நிர்வாகிகள் சிலர் விரைவில் தோனியை நேரில் சென்று ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பானது அக்டோபர் நடுப்பகுதியில் மும்பையில் நடைபெறும் என தெரிகிறது.

4 / 6

கடந்த மாதம் அமெரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டிருந்த தோனி, சமீபத்தில் இந்தியா வந்தடைந்தார். விரைவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்த கூட்டத்தில் தோனி தனது இறுதி முடிவை அறிவிக்கலாம்.

5 / 6

உடற்தகுதி இல்லாமல் இருந்த போதிலும் கடந்த சீசனில், எம்எஸ் தோனி 14 போட்டிகளில் 200க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் 161 ரன்கள் எடுத்தார். அவர் அடித்த பெரும்பாலான பந்துகள் சிக்ஸர்களுக்கும் பறந்தது. அதேபோல், இந்த முறையும், தோனி சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விரட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

6 / 6

பிசிசிஐ சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 4 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஓய்வு பெற்ற வீரர்கள் அன் கேப்டு வீரராக ஐபிஎல் 2025ல் விளையாடலாம் என்று தெரிவித்திருந்தது. இதனால், ஐபிஎல் 2025ல் தோனி அன் கேப்ட் வீரர்கள் பட்டியலில் தோனி இடம் பெற்று விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். மேலும், அன் கேப்டு விதியே தோனிக்காகதான் பிசிசிஐ கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!