5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IPL 2025: ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட தடை..! ஏன் தெரியுமா..?

Hardik Pandya: வருகின்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா, தடை காரணமாக விளையாட மாட்டார். இதையடுத்து, முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா அல்லது சூர்யகுமார் யாதவ் தலைமை தாங்கலாம்.

mukesh-kannan
Mukesh Kannan | Published: 27 Nov 2024 21:47 PM
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு பிறகு பங்கேற்கும் பத்து அணிகளும் ஐபிஎல் 18வது சீசனுக்கு தயாராக உள்ளது. வரும் சீசனில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போன்ற அணிகள் முதல் பட்டத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்கும்.

1 / 6
மறுபுறம், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் போட்டியின் முதல் போட்டியிலேயே பின்னடைவை சந்தித்துள்ளது. அதாவது, அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதல் போட்டியில் விளையாட மாட்டார். ஏனெனில், அதற்கு காரணம் காயம் அல்ல, கடந்த சீசனில் செய்த தவறுதான் இதற்கு காரணம்.

2 / 6
கடந்த 2024 ஐபிஎல்லின்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸூக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 20 ஓவர்களை முடிக்கவில்லை. இதனால் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 30 லட்சம் அபராதமும், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

3 / 6
இதன்காரணமாக, வருகின்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா, தடை காரணமாக விளையாட மாட்டார். இதையடுத்து, முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா அல்லது சூர்யகுமார் யாதவ் தலைமை தாங்கலாம்.

4 / 6
ஐபிஎல் விதிகளின்படி ஒவ்வொரு அணியும் 20 ஓவர்களை ஒன்றரை மணி நேரத்தில் முடிக்க வேண்டும். ஒரு பீல்டரால் கூடுதல் நேரம் குறைக்கப்பட்டு, தவறு செய்யும் அணிக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதே தவறை இரண்டாவது முறை செய்தால் கேப்டன் 24 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். மீதமுள்ள 10 வீரர்களுக்கு தலா ரூ.6 லட்சம் அல்லது போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

5 / 6
மூன்றாவது முறையாக இந்த தவறை செய்தால், கேப்டனுக்கு 30 லட்சம் அபராதுடன்,  ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விளையாடும் லெவன் அணியில் உள்ள மற்ற 10 வீரர்கள் ரூ.12 லட்சம் அபராதம் அல்லது போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் செலுத்த வேண்டும். ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இதுபோன்ற தவறை மூன்று முறை செய்துள்ளார்.

6 / 6
Latest Stories