IPL Retention 2025: 3 கேப்டன்கள் உட்பட 6 நட்சத்திர வீரர்கள்.. வெளியேற்றப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி! - Tamil News | IPL 2025 Top Player Retention: Top 6 players including Rishabh Pant and KL Rahul have been released | TV9 Tamil

IPL Retention 2025: 3 கேப்டன்கள் உட்பட 6 நட்சத்திர வீரர்கள்.. வெளியேற்றப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Published: 

31 Oct 2024 20:33 PM

IPL 2025 Top Player Retention: ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்பு, அனைத்து 10 ஐபிஎல் அணிகளும் தங்களது தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நட்சத்திர வீரர்களில் சிலரையும் அணியில் இருந்து நீக்கியுள்ளனர். இது அதிர்ச்சியையும் ஆர்ச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் 6 வீரர்கள் அணியில் இருந்து வெளியேறிய முக்கிய வீரர்களை பார்க்கலாம்.

1 / 6ரிஷப்

ரிஷப் பண்ட்: கடந்த 2015ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முக்கிய வீரராக இருந்த ரிஷப் பண்ட், அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், வருகின்ற ஏலத்தின் மூலம் புதிய அணியில் விளையாடுவதை பார்க்கலாம்,. கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட்டை அணியில் இருந்து நீக்கிய டெல்லி அணி, அக்சர் பட்டேல் உள்ளிட்ட ஐந்து வீரர்களை தக்க வைத்துக் கொண்டது.

2 / 6

கே.எல்.ராகுல்: கடந்த 3 ஆண்டுகளாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக ராகுல் குறித்து இதுபோன்ற செய்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன. தற்போது அந்த செய்தி உண்மையாகிவிட்ட நிலையில், லக்னோ அணியில் இருந்து கே.எல். ராகுல் வெளியேறியுள்ளார். இதையடுத்து, மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கே கே.எல்.ராகுல் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 / 6

ஷ்ரேயாஸ் ஐயர்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து கடந்த சீசனில் அந்த அணியை சாம்பியனாக்கிய ஷ்ரேயாஸ் ஐயர், கேகேஆர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கேகேஆர் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ள நிலையில், 6 வீரர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

4 / 6

அர்ஷதீப் சிங்: பஞ்சாப் கிங்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருந்த அர்ஷதீப் சிங்கை நீக்கி பஞ்சாப் அணி அதிரடி முடிவு எடுத்தது. இரண்டு வீரர்களை மட்டும் சொற்ப தொகைக்கு தக்கவைத்துள்ள பஞ்சாப் அணி ஏலத்திற்காக பெரும் தொகையை வைத்து முக்கிய வீரர்களை வாங்கும் முடிவில் உள்ளது.

5 / 6

ஜோஸ் பட்லர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரும் அணியில் இருந்து விலகியுள்ளார். அணியின் பேட்டிங்கில் முதுகெலும்பாக இருந்த பட்லரை வீழ்த்திய அணி ஏற்கனவே 6 வீரர்களை அணியில் தக்கவைத்துள்ளது. இதனால் ஏலத்தில் பட்லர் புதிய அணியுடன் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

6 / 6

இஷான் கிஷான்: தொடக்க ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான இஷான் கிஷானை அணியில் இருந்து நீக்கி அதிரடி முடிவை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த சில ஐபிஎல் சீசன்களில் இஷான் கிஷன் சிறப்பாக செயல்படவில்லை. இதையடுத்து, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் இஷான் கிஷனை எடுக்க முயற்சிக்கலாம்.

அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவது ஆபத்தில் முடியலாம்
குறைந்த நேரம் தூங்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள்!
1 ஆண்டுக்கான FD - தனியார் வங்கிகளின் வட்டி விகிதங்கள்!
லிப்ஸ்டிக் பயன்படுத்துவதில் இவ்வளவு ஆபத்துக்கள் உள்ளதா?