Headache: தலைவலிக்கு மாத்திரை சாப்பிடுவது நல்லதா? இந்த குறிப்புகளை பின்பற்றவும்! - Tamil News | Is it good or bad to take pills for headache; health tips in tamil | TV9 Tamil

Headache: தலைவலிக்கு மாத்திரை சாப்பிடுவது நல்லதா? இந்த குறிப்புகளை பின்பற்றவும்!

Published: 

15 Nov 2024 21:19 PM

Health Tips: தலைவலி ஏற்பட மன அழுத்தம், பதட்டம், சோர்வு, அதிக வேலை போன்ற பல காரணங்கள் இருக்கலாம். தலைவலி வந்ததும் ஒரு சிலர் நேராக மெடிக்கல் கடைகளுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி போட்டு கொள்வார்கள்.

1 / 6தலைவலி

தலைவலி என்பது ஒரு பொதுவான பிரச்சனை. இது எந்த வயதினருக்கும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். சிலருக்கு தலைவலி என்பது எப்போதாவதும், சிலருக்கு அடிக்கடியும் ஏற்படும். தலைவலி என்பது அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கும்.

2 / 6

தலைவலி ஏற்பட மன அழுத்தம், பதட்டம், சோர்வு, அதிக வேலை போன்ற பல காரணங்கள் இருக்கலாம். தலைவலி வந்ததும் ஒரு சிலர் நேராக மெடிக்கல் கடைகளுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி போட்டு கொள்வார்கள்.

3 / 6

மாத்திரை போடுவது ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இதையடுத்து, , தலைவலியைக் குறைக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, சில விஷயங்களை வீட்டிலேயே முயற்சி செய்யலாம்.

4 / 6

தலைவலிக்கான பொதுவான காரணம் உடலில் நீரிழப்பு ஏற்படுவதும் கூட. தினமும் குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிப்பதால், நீரிழப்பு அபாயத்தை குறைக்கும். இதன்மூலம், தலைவலியை குறைக்கவும், ஏற்படாமல் தடுக்கவும் உதவி செய்யும்.

5 / 6

தியானம், யோகம் உள்ளிட்டவற்றை மேற்கொள்வது மன ஆரோக்கியத்திற்கு நல்லது என்றே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், தியானம் செய்வது தலைவலியையும் குணப்படுத்தும் என்ஆல் உங்களால் நம்ப முடியுமா..? தியானம் தினமும் செய்து வந்தால், மன அழுத்தத்தை குறைத்து, தலைவலி வராமல் தடுக்கும்.

6 / 6

அக்ரூட் பருப்புகள், பாதாம், முந்திரி பருப்புகளை சாப்பிட்டால் தலைவலி குறையும். ஏனெனில் இவற்றில் நல்ல அளவு மெக்னீசியம் தலைவலியைத் தடுக்கும். மேலும், இது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவி செய்யும்.

தோல்வியில் இருந்து எளிதாக மீள்வது எப்படி?
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்!
கிராம்பை வாயில் வைத்து தூங்கலாமா?
3 வேளை சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?