Diwali: தீபாவளி நாளில் சனீஸ்வர பகவானை வழிபட்டால் செல்வம் பெருகும்! - Tamil News | it is very good to worship lord saneswara like this on Diwali details in Tamil | TV9 Tamil

Diwali: தீபாவளி நாளில் சனீஸ்வர பகவானை வழிபட்டால் செல்வம் பெருகும்!

Published: 

17 Oct 2024 15:02 PM

Worship Lord Shani on Diwali: தீபாவளி திருநாளில் லட்சுமி தேவியை மிகுந்த பக்தியுடன் வழிபடுவார்கள். லட்சுமி தேவியிடம் கருணையை எதிர் பார்த்து வேண்டிக் கொள்வார்கள். சிலர் லட்சுமி தேவி பூஜையை ஆரவாரத்துடன் செய்து மகிழ்வார்கள். ஆனால் தீபாவளி நாளில் லட்சுமி தேவியை மட்டுமல்லாமல் சனி பகவானையும் வழிபட்டால் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

1 / 5தீபாவளியை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதிலும் தீபாவளி வரும் பொழுது குழந்தைகள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார்கள். ஏனென்றால் பட்டாசு வெடித்து சுவையான இனிப்பு வகைகளை சாப்பிடலாம் என்று குதூகளிப்பார்கள்.‌ மறுபுறம் தீபாவளி திருநாளில் லட்சுமி தேவியை மிகுந்த பக்தியுடன் வழிபடுவார்கள். லட்சுமி தேவியிடம் கருணையை எதிர் பார்த்து வேண்டிக் கொள்வார்கள். சிலர் லட்சுமி தேவி பூஜையை ஆரவாரத்துடன் செய்து மகிழ்வார்கள். ஆனால் தீபாவளி நாளில் லட்சுமி தேவியை மட்டுமல்லாமல் சனி பகவானையும் வழிபட்டால் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

தீபாவளியை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதிலும் தீபாவளி வரும் பொழுது குழந்தைகள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார்கள். ஏனென்றால் பட்டாசு வெடித்து சுவையான இனிப்பு வகைகளை சாப்பிடலாம் என்று குதூகளிப்பார்கள்.‌ மறுபுறம் தீபாவளி திருநாளில் லட்சுமி தேவியை மிகுந்த பக்தியுடன் வழிபடுவார்கள். லட்சுமி தேவியிடம் கருணையை எதிர் பார்த்து வேண்டிக் கொள்வார்கள். சிலர் லட்சுமி தேவி பூஜையை ஆரவாரத்துடன் செய்து மகிழ்வார்கள். ஆனால் தீபாவளி நாளில் லட்சுமி தேவியை மட்டுமல்லாமல் சனி பகவானையும் வழிபட்டால் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

2 / 5

சனி பகவான் என்றால் பலருக்கும் பயம். ஏனெனில் சனியின் சாபம் ஏழு வருடங்கள் வரை நீங்காது. தவறு செய்பவர்களையே சனி பகவான் தண்டிக்கிறார். சனி பகவான் அந்தந்த பிறவிகளில் ஒருவர் செய்யும் கருமங்களுக்கு ஏற்ப பலன்களை தருகிறார். எனவே இந்த தீபாவளி நன்னாளில் சனி‌‌ பகவானை வழிபட்டால் நாம் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

3 / 5

சனி பகவான் கருணையுடன் இருந்தால் ஏழையும் அரசனாகலாம். அதுபோல அரசனும் பிச்சைக்காரனாக மாறுகிறான். அந்த அளவுக்கு சக்தி கொண்டவர் சனீஸ்வர பகவான். அதனால் தான் நல்ல செயல்களைச் செய்து இறைவனின் அருளைப் பெற வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக தீபாவளி நாளில் லட்சுமி தேவியைத் தவிர சனீஸ்வரரையும் வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். தீபாவளியன்று சனி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். இதே போல், அனுமன் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் சாமியை வணங்கினாலும், சனி பகவான் நம்மை ஆசீர்வதிப்பார் என்று பல புராணங்களும் கூறுகின்றன.

4 / 5

அமாவாசை திதி நாளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அமாவாசை சனி பகவானுக்கு மிகவும் பிடித்தமான நாளாக கூறப்படுகிறது. எனவே தான் தீபாவளியன்று சனி பகவானை முழு சக்தியுடன் வழிபடுவது நல்ல பலனைத் தரும். சனி கிரகத்தின் அருளுக்காக நாய், பசு, காகங்களுக்கு அவை விரும்பி சாப்பிடுவதை போட வேண்டும்

5 / 5

தீபாவளி பண்டிகையன்று கருப்பு எறும்புகளுக்கு சர்க்கரை அல்லது வெல்லம் கொடுங்கள். கஷ்டப்படுபவர்கள் தீபாவளியன்று ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் முகம் பார்க்க வேண்டும். அதன் பிறகு இந்த எண்ணெயை ஓடும் நீரில் போட வேண்டும். அதன் பிறகு உங்கள் கால்களையும் கைகளையும் கழுவிவிட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்குச் செல்லுங்கள். இப்படிச் செய்தால் பெரிய பணமும், வேலையில் பதவி உயர்வும் கிடைக்கும்.

மனித உடலில் உள்ள இரத்தம் ஏன் உப்பாக இருக்கிறது..?
குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்