Jaguar: லோகோவை மாற்றியது ஜாகுவார்… என்னென்ன மாற்றங்கள்? - Tamil News | Jaguar announced to change the logo and brand design for upcoming cars details in tamil | TV9 Tamil

Jaguar: லோகோவை மாற்றியது ஜாகுவார்… என்னென்ன மாற்றங்கள்?

Published: 

21 Nov 2024 17:18 PM

Change of Jaguar Logo: இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கார் நிறுவனமான ஜாக்குவார் தனது பிராண்டின் புதிய லோகோவை அறிமுகப்படுத்தி உள்ளது. 2026 ஆம் ஆண்டு முதல் முழுவதுமாக மின்சாரக் கார் உற்பத்தி செய்ய இருக்கும் அந்த நிறுவனம், அதற்கான சந்தைப்படுத்துதல் உத்தி இது என்றும் தெரிவித்துள்ளது

1 / 5இங்கிலாந்து

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சொகுசு வாகன தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் தன் நிறுவனத்தின் புதிய லோகோ மற்றும் பிராண்டின் உத்தியை வெளியிட்டுள்ளது. 1935 ஆம் ஆண்டு முதல் பல்வேறு வகையான வாகனங்களை தயாரித்து வரும் இந்த நிறுவனம் வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் முழுவதுமாக மின்சார கார் தயாரிப்பாளராக மாறுவதை நோக்கி நகர்ந்து வருகிறது. சமீப காலமாக மின்சார காரின் தேவைகள் அதிகரித்து வருகிறது. எனவே இந்த நிறுவனம் 2026 ஆம் ஆண்டுக்குள் மின்சார வாகனம் தயாரிக்கும் பரிணமிக்க செயல்முறையை மேற்கொண்டு வருகிறது.

2 / 5

இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக தனது நிறுவனத்தின் அடையாளமான லோகோவை மாற்றி உள்ளது. இனி வெளிவரும் மாடல்களில் புதிய லோகோ இடம் பெறும். ஆனால் இந்த புதிய லோகோ எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏற்கனவே இருக்கும் லோகோவை மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதாகவும் எனவே பழைய லோகோவிற்கு திரும்புமாறும் மக்கள் தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

3 / 5

ஜாகுவார் நிறுவனத்தின் நிறுவனர் சர் வில்லியம் லியோன்ஸ், "ஜாகுவார் எவற்றின் நகலாகவும் இருக்கக் கூடாது" என்ற கருத்தை முன்னிறுத்தி செயல்பட்டு வந்தார். அதன் அடிப்படையில் இப்போது இது எக்ஸுபர்ன்ட் மாடர்னிசம் என்ற பிராண்டின் சமீபத்திய தத்துவத்தின் மைய யோசனையாக செயல்படுகிறது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த லோகோ, முந்தைய தீம்மிலிருந்து (Theme) சில மாற்றத்தை இதன் வடிவம் மற்றும் சண்டை நிலைப்பாடு ஆகிய இரண்டிலும் பிராண்டின் மாற்றத்தை இது வெளிப்படுத்துகிறது.

4 / 5

ஜாகுவார் புதிய பிராண்டிங்கை காட்சிப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மியாமியில் டிசம்பரில் நடைபெற உள்ள கண்காட்சியில் தனது புதிய மாடல் கார்களை காட்சிப்படுத்து இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் புதிய லோகோ உடன் ஜாக்குவார் மூன்று புதிய எலக்ட்ரிக் கார்களை 2026 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்துவதற்கான திட்டத்தை கொண்டுள்ளது. இதன் மூலம் முழுமையான மின்சார சொகுசு காரின் தயாரிப்பை நோக்கி இந்த நிறுவனம் நகர்கிறது.

5 / 5

புதிய லோகோவிற்கு இணையத்தில் பல எதிர்மறை கருத்துக்கள் வந்த நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலோன் மஸ்க், "நீங்கள் கார்களை விற்கிறீர்களா?" என்று ஜாகுவார் நிறுவனம் வெளியிட்ட வீடியோவிற்கு X தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த ‌ ஜாகுவார், ஆம். டிசம்பர் 2ஆம் தேதி மியாமியில் நடைபெறும் கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்தது.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?