திருச்செந்தூர் சூரசம்ஹாரம்…‌ அலை கடலென குவிந்த பக்தர்கள்! - Tamil News | kadha sasti 2024 surasamharam is celebrated today in tiruchendur murugan temple tuticorin details in tamil | TV9 Tamil

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்…‌ அலை கடலென குவிந்த பக்தர்கள்!

Published: 

07 Nov 2024 16:01 PM

Surasamharam: தமிழ் கடவுள் என்று அறியப்படும் முருகனுக்கு சிறப்பு மிக்க பல வரலாறு இருந்தாலும் அசுரனை வதம் செய்த வரலாறை தான் பக்தர்கள் பிரபலமாக கொண்டாடி வருகிறார்கள். தேவர்களுக்கு தொல்லை கொடுத்த சூர பத்மனை வதம் செய்த இந்த நிகழ்வினை போற்றும் வகையில் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் திருவிழா நடைபெறும்.

1 / 7முருகனின்

முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கந்த சஷ்டியின் கடைசி நாளான‌ சூரசம்ஹாரம் தினமான இன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்விற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்

2 / 7

முருகனின் ஐந்தாவது படை வீடான திருத்தணி கோவிலை தவிர மற்ற கோவில்களில் இந்த சூரசம்ஹாரம் விழா கோலாலமாக கொண்டாடப்படும். அதில் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கந்த சஷ்டி திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவிற்கு தமிழகம் எங்கும் இருக்கும் பக்தர்கள் வருகை தந்துள்ளார்கள்.

3 / 7

அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் காலை 9 மணிக்கு உச்சக்கால் அபிஷேகமும் பெருகல் 1:00 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெற்றது.

4 / 7

அதிகாலை முதல் நடைபெற்று வரும் இந்த கோலாகல திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு வருகிறார்கள். இந்த நிகழ்வில் ஒரு பகுதியாக மாலை 4:39 மணிக்கு திருக்கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

5 / 7

சூரசம்ஹார நிகழ்விற்கு வருகை தரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவல் உதவி மையங்கள், முதலுதவி சிகிச்சை, தற்காலிக பேருந்து நிலையங்கள் உட்பட்ட பல சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

6 / 7

கோயிலை சுற்றி கழிப்பறைகள், வாகன நிறுத்தும் இடங்கள் மற்றும் அத்தியாவசிய தகவலை தெரிந்து கொள்ள QR கோடு போன்ற வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7 / 7

20000 பேர் தங்கக்கூடிய வகையில் 18 இடங்களில் 18 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்வு நடைபெறும் இடங்களை சுற்றி மொத்தம் 4 காவல் உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர அவசர மருத்துவ உதவி மையம், தீயணைப்பு துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் எந்நேரமும் பணியில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!