Menstrual Leave: மாதவிடாய் விடுமுறை.. பெண்களுக்கு 6 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை.. அரசு எடுத்த முடிவு! - Tamil News | Karnataka government to grant six days of annual paid menstrual leave says labour minister Santosh lad | TV9 Tamil

Menstrual Leave: மாதவிடாய் விடுமுறை.. பெண்களுக்கு 6 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை.. அரசு எடுத்த முடிவு!

Published: 

21 Sep 2024 15:25 PM

கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். இது அமல்படுத்தப்பட்டால் பீகார், கேரளா, ஒடிசா மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்கும் நான்காவது மாநிலமாக கர்நாடகா உருவாகும்.

1 / 7அலுவலகங்களில்

அலுவலகங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் மாதவிடாய் நேரங்களில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனால் அவர்களது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சில நாட்களில் அவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு சில மாநிலங்களில் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2 / 7

முதன்முதலாக பீகார் மாநிலத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, 2023ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுமுறையும் அளிக்கப்பட்டிருக்கிறது.

3 / 7

சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் அரசு, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பிரவதி பரிடா தெரிவித்திருந்தார். பெண்கள் மாதவிடாயின் முதல் நாளோ அல்லது இரண்டாவது நாளோ விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். அம்மாநில முதல்வர் அறிவித்திருந்தார்.

4 / 7

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்திலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்க அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறை வழங்கும் சட்டத்தை கர்நாடக அரசு கொண்டு உள்ளதாக அம்மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியுள்ளார்.

5 / 7

இதுகுறித்து அவர் கூறுகையில், "பெண்கள் நலம் சார்ந்து கர்நாடக அரசு புதிய கொள்கையை வகுத்துள்ளது. இதற்கான மசோதாவை உருவாக்க 18 பேர் கொண்ட குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது . குழு அமைத்த பரிந்துரைகளை பரிசீலித்து வருகிறோம். பெண்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஏற்ற தாழ்வுகளை அனுபவிப்பதால், இந்த முயற்சி பெண் பணியாளர்களை ஆதரிக்கிறது" என்றார்.

6 / 7

தொடர்ந்து பேசிய அவர், "இந்த விடுப்பு நெகிழ்வுத் தன்மை உடையதாக இருக்கும். இதனால் பெண்கள் தங்களுக்கு நேரம் தேவைப்படும்போது விடுப்பை தேர்வு செய்து கொள்ளலாம். இது தொடர்பாக தொழில் நிறுவனங்களுடன் விரிவான ஆலோசனை நடத்திய பிறகு சட்டம் கொண்டு வரப்படும்" என்றார். இதனால் கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் மாதவிடாய் விடுமுறை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்த முறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7 / 7

இது அமல்படுத்தப்பட்டால் பீகார், கேரளா, ஒடிசா மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்கும் நான்காவது மாநிலமாக கர்நாடகா உருவாகும். மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுப்பு வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது. அண்மையில், பெண் ஊழியர்களுககு மாதவிடாய் விடுமுறை குறித்த மாதிரித் திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

Follow Us On
தினசரி காலையில் பாதாம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
தென்னிந்தியாவின் மாஸ் நடிகை தான் இந்த சிறுமி
கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த மீன் வகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள்..
பல வகையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பனீர்..!
Exit mobile version