சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு குட்நியூஸ்… வாட்ஸ் அப் மூலம் உதவிகள்! - Tamil News | Kerala government launches Swami chatbot assist Sabarimala pilgrims details in Tamil | TV9 Tamil

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு குட்நியூஸ்… வாட்ஸ் அப் மூலம் உதவிகள்!

Published: 

22 Nov 2024 09:04 AM

WhatsApp Number for Ayyapa Devotees: ஐயப்ப தீட்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கார்த்திகை மாதம் தொடங்கி விட்டதால் அனைத்தும் ஐயப்ப பக்தர்களும் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்ல தயாராகி வருகிறார்கள். கடந்த ஆண்டு ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பக்தர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது.

1 / 5தென்

தென் மாநிலங்களில் அதிகம் பேர் பக்தியுடன் ஐயப்பன் மாலை அணிகின்றனர். மேலும் அவர்கள் சபரிமலைகளிலும் இறைவனின் தரிசித்து வழிபட்டு வருகின்றனர். சபரிமலையில் ஆண்டுதோறும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அடிக்கடி அங்கு நெரிசல் ஏற்படுகிறது. மேலும் 12 முதல் 18 மணி நேரம் வரை வரிசையில் நிற்கும் நிலை படுகிறது. கடந்த ஆண்டு ஐயப்ப பக்தர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்

2 / 5

கடந்த ஆண்டு போல் இல்லாமல் இந்த ஆண்டு பல வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மகுடம் வைத்தது போல இன்றைய தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் ஏதேனும் பிரச்சினையில் சிக்கினால் அவர்களுக்கு உடனடியாக உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்தாண்டு ஏற்பட்ட சிரமங்களை ஆய்வு செய்த பட்டணத்திட்டா‌ மாவட்ட ஆட்சியர் பிரேம்குமார் இந்த செயற்கை நுண்ணறிவு வாட்ஸ் அப் எண்ணை பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்திருக்கிறார்.

3 / 5

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் 6238008000 என்று எண்ணி சேமித்து வைத்துக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த எண்ணிற்கு Hi என்று மெசேஜ் அனுப்பினால் பல ஆப்ஷன்களை பக்தர்கள் பெறுவார்கள். அதன் மூலம் தங்களுக்கு தேவையான சேவையை அவர்களால் பெற முடியும். தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஆறு மொழிகளில் தகவல் கிடைக்கப்படும். உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து உங்களுக்கு தேவையான மொழியில் தகவலை பெறலாம்.

4 / 5

இதன் மூலம் வரிசை விவரங்கள், கோயில் சேவைகள் அல்லது ஏதேனும் சிறப்பு சேவைகள் பற்றிய தகவல்களை இதன் மூலம் ஒரு நொடியில் அறிய முடியும். மேலும் மருத்துவ அவசர நிலை பட்டாலும், சபரிமலை செல்லும் வழியில் வாகனம் பழுதாகி விட்டாலும், காவல்துறையின் உதவி தேவைப்பட்டாலும், உங்களுடன் வரும் பக்தர்கள் காணாமல் போனாலும் அந்த வாட்ஸ் அப் எண்ணில் தகவல் கொடுத்தால் உடனடியாக கால் சென்டரில் இருந்து அழைப்பு வரும். நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியில் பேசினாலும் மறுபக்கம் உங்கள் பிரச்சினையை புரிந்து கொண்டு விரைவில் உங்களுக்கு உதவி கிடைக்கும்.

5 / 5

முன்பெல்லாம் ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் கோவிலின் தொடர்பு எண்ணுக்கு அழைக்க வேண்டும். நாடு முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் இந்த எண்கள் தொடர்ந்து பிசியாகவே இருக்கும். இது தவிர மொழி பிரச்சனையும் இருக்கும். இதனை சரி செய்யும் விதமாக இந்த வாட்ஸ் அப் எண் பக்தர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பக்தர்கள் மலைப் பாதையில் ஏற்படும் போக்குவரத்தை அவ்வபோது அறிந்து அதற்கு ஏற்ப திட்டமிடும் வாய்ப்பு தற்பொழுது கிடைத்துள்ளது. இதனால் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?