How To Reduce Stress: அதிகப்படியான மன அழுத்தத்தால் அவதியா..? இதை செய்து ஓடவிடுங்கள்..! - Tamil News | Know how to get out of excessive stress; Tips To Improve Mood in tamil | TV9 Tamil

How To Reduce Stress: அதிகப்படியான மன அழுத்தத்தால் அவதியா..? இதை செய்து ஓடவிடுங்கள்..!

Published: 

11 Oct 2024 21:53 PM

Stress: வீடு, அலுவலகம் உள்ளிட்ட 4 சுவர்களுக்குள் நீங்கள் மன அழுத்தத்தை உணர்ந்தால், உடனடியாக அங்கிருந்து வெளியேறுவது நல்லது. அருகில் ஏதாவது கடற்கரை, பூங்கா அல்லது இயற்கை சார்ந்த இடங்களுக்கு சென்று சிறிது நேரம் நடந்து கொடுங்கள். இது உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தி மூளைக்கு ஆக்ஸிஜனை தரும். இது உங்கள் மனநிலையை அமைதி படுத்தும்.

1 / 6நாம்

நாம் ஒவ்வொரு நாளும் மன அழுத்தம், கவலை மற்றும் சவால்களை கடந்து செல்கிறோம். இதில் ஏதேனும் ஒன்று கட்டுப்பாட்டை மீறும்போதும், இது நமக்கு மனரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தும். மோசமான மனநிலை இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

2 / 6

வீடு, அலுவலகம் உள்ளிட்ட 4 சுவர்களுக்குள் நீங்கள் மன அழுத்தத்தை உணர்ந்தால், உடனடியாக அங்கிருந்து வெளியேறுவது நல்லது. அருகில் ஏதாவது கடற்கரை, பூங்கா அல்லது இயற்கை சார்ந்த இடங்களுக்கு சென்று சிறிது நேரம் நடந்து கொடுங்கள். இது உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தி மூளைக்கு ஆக்ஸிஜனை தரும். இது உங்கள் மனநிலையை அமைதி படுத்தும்.

3 / 6

இசை உங்கள் மனநிலையை பெரியளவில் மாற்றத்தை கொடுக்கும். இதன் காரணமாகவே நாம் சோகமான பாடல்களை கேட்கும்போது நம் மனது காரணமே இல்லாமல் சோகமாகவும், அதிரடியான குத்து பாடல்களை கேட்கும்போது துள்ளி குதிக்கவும் செய்கிறது. மன அழுத்தம் ஏற்படும்போது மகிழ்ச்சியான பாடல்களை கேளுங்கள். இது உங்களுக்கு நல்ல பலனை தரும்.

4 / 6

அதிகப்படியான மன அழுத்தத்தை உணரும்போது சமையலறைக்கு சென்று உங்களுக்கு பிடித்தமான உணவுகளை சமைக்கலாம். இந்த சிக்கலில் இருந்து விடுபட இதை விட சிறந்தது ஏதுவுமில்லை. நீங்கள் சமையலில் ஈடுபடும்போது, உங்கள் முழு கவனமும் சமையலில் இருக்கும். இது உங்கள் மனநிலையை மாற்றும்.

5 / 6

கணினி, மொபைல், லேப்டாப் ஆகியவற்றின் அதிகப்படியான பயன்பாடு மனச்சோர்வு , மோசமான தூக்கம், கழுத்து வலி போன்றவற்றை தருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது உங்களுக்கு மன அழுத்தத்தை தொடர்ந்து கொடுக்கும். எனவே, இதுபோன்ற சாதனைகளை உங்களிடம் இருந்து விலக்கி வைத்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுங்கள்.

6 / 6

மன அழுத்தத்திற்கு காரணத்தை முதலில் பெரிதாக எடுத்து கொள்ளாதீர்கள். எதுவும் சீக்கிரம் சரியாகும் என்ற மனநிலையை உங்களுக்கு கொண்டு வாருங்கள். இது உங்களுக்கு அந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியம் மற்றும் நம்பிக்கையை கொடுக்கும். முடிந்தவரை அந்த பிரச்சனைகளை உங்களது நம்பிக்கைக்குரியவரிடம் பகிருங்கள். ஒருவேளை அதற்கான தீர்வுகளை அவர்கள் தரலாம்.

செரிமானத்தை மேம்படுத்த வேண்டுமா ? அப்போ இதை பாலோ பண்ணுங்க
மோகன் லால் உடன் இருக்கும் இந்த சிறுமி யார்?
தங்க நிற உடையில் ஜொலிக்கும் ஜான்வி போட்டோஸ் இதோ
குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வெற்றி படிநிலைகள்!
Exit mobile version