பிரியாணி முதல் டார்ஜிலிங் டீ வரை.. டொனால்ட் ட்ரம்புக்கு பிடித்த இந்திய உணவுகள்! | Know the Donald trump loved Indian foods Tamil news - Tamil TV9

மட்டன் பிரியாணி முதல் டார்ஜிலிங் டீ வரை.. டொனால்ட் ட்ரம்புக்கு பிடித்த இந்திய உணவுகள்!

Published: 

18 Nov 2024 14:04 PM

Donald trump : அமெரிக்காவின் அதிரடி அதிபராக டொனால்ட் ட்ரம்ப் கருதப்படுகிறார். தீவிர வலதுசாரியான இவர், தனது ஆட்சிக் காலத்தில் சட்டங்களில் பல்வேறு திருத்தங்களை கொண்டுவந்தார். இதில் சில அந்நாட்டிலே எதிர்ப்புக்குள்ளாகின. டொனால்ட் ட்ரம்ப் ஓர் உணவு பிரியர் ஆவார்.

1 / 8அமெரிக்க

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி வாகை சூடினார். உலகின் பெரியண்ணன் என அழைக்கப்படும் அமெரிக்காவை ட்ரம்ப் இரண்டாவது முறையாக வழிநடத்தப் போகிறார்.

2 / 8

டொனால்ட் ட்ரம்ப் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகிவருகின்றன. சிறு வயதில் இருந்தே டொனால்ட் ட்ரம்ப் கடும் உழைப்பாளி ஆக அறியப்படுகிறார். இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்ப் இந்திய உணவுகளை விரும்பி சாப்பிடுவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

3 / 8

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு பிடித்த 5 இந்திய உணவுகள் குறித்து பார்க்கலாம்.

4 / 8

இந்திய உணவுகளில் சமோசா ட்ரம்புக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, ப்ராக்கோலி, மக்காசோளம் மசாலா கொண்ட சமோசாக்களை விரும்பி எடுத்துக்கொள்வார்.

5 / 8

இந்திய இனிப்பு வகைகளில், ட்ரம்ப்புக்கு முந்திரி கட்லி மிகவும் பிடிக்கும்.

6 / 8

இது தவிர ஆலு திக்கி எனப்படும் உருளைக் கிழங்கில் செய்யப்படும் ஒருவகை வட இந்திய உணவும் ட்ரம்புக்கும் பிடிக்குமாம்.

7 / 8

சாப்பாடு விஷயத்தில் இந்திய பிரியாணி மீது ட்ரம்புக்கு விருப்பம் அதிகம். மட்டன் பிரியாணி என்றால் ஒரு பிடி பிடிப்பார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

8 / 8

பானத்தை பொறுத்தவரை ட்ரம்புக்கு டார்ஜிலிங் தேநீர் என்றால் கொள்ளை பிரியமாம். இதேபோல் எலுமிச்சை, மல்லி இலையில் தயாரிக்கப்பட்ட சூப்பும் விரும்பி குடிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிட வேண்டும்?
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.13,000 தள்ளுபடி!