Mustard Seeds: உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரும் கடுகு… இந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு! - Tamil News | Know what problems in the body can be cured by taking mustard daily | TV9 Tamil

Mustard Seeds: உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரும் கடுகு… இந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு!

Published: 

15 Aug 2024 18:10 PM

Health Tips: தினமும் கடுகு சாப்பிடுபவர்களுக்கு பற்களில் பிரச்சனைகள் குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிலும், குறிப்பாக பல்வலியால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த தீர்வையும் கடுகு தருகிறது. கடுகை நீரில் கொதிக்க வைத்து தினமும் குடிப்பது நல்லது. மேலும், இந்த நீரில் வாய் கொப்பளிப்பதால் பல்வலி விரைவில் நீங்கும்.

1 / 7ஆயுர்வேதத்தில்

ஆயுர்வேதத்தில் கடுகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதற்கு காரணம், கடுகு செரிமானத்திற்கு மட்டுமின்றி பல வகையான உடல்நல பிரச்சனைகளை தீர்க்கவும் பயன்படுகிறது.

2 / 7

கடுகில் உள்ள நார்ச்சத்து செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது. மேலும், இது தோல் பிரச்சினைகள் மற்றும் தடிப்புத் தோல் அழற்சி பிரச்சனையையும் சரி செய்யும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

3 / 7

தினசரி உணவில் கடுகு பயன்படுத்துவதன்மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. கடுகானது சுவாச பிரச்சனைகள், வலி ​​மற்றும் செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது.

4 / 7

தினமும் கடுகு சாப்பிடுபவர்களுக்கு பற்களில் பிரச்சனைகள் குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிலும், குறிப்பாக பல்வலியால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த தீர்வையும் கடுகு தருகிறது.

5 / 7

கடுகை நீரில் கொதிக்க வைத்து தினமும் குடிப்பது நல்லது. மேலும், இந்த நீரில் வாய் கொப்பளிப்பதால் பல்வலி விரைவில் நீங்கும். கடுகு பொடி அல்லது கடுகு எண்ணெயை காயங்களில் தடவினால் விரைவில் குறையும்.

6 / 7

சிலருக்கு மூட்டு வலி பிரச்சனையால் நடக்க முடியாத நிலை ஏற்படும். அப்போது, ஒரு டீஸ்பூன் கடுகு மற்றும் கற்பூரத்தை கலந்து மிருதுவாக பொடி செய்து கொள்ளவும். சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து வலி உள்ள இடத்தில் தடவவும். இவ்வாறு செய்வதால் வலி மிக விரைவில் குறையும்.

7 / 7

ஃபுட் பாய்சனால் வயிற்று உப்புசம் ஏற்படும். அப்போது, ஒரு ஸ்பூன் கடுகு பொடியை தண்ணீரில் கலந்து குடிக்கவும். இப்படி செய்வதால் வயிற்றில் உள்ள கெட்ட உணவு வாந்தியாக வெளியேறும். அதன் பிறகு வயிறு பிரச்சனை சரியாகும்.

மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.13,000 தள்ளுபடி!
புடவையில் சொக்க வைக்கும் நடிகை அஞ்சலி
அடுத்த மாதம் கீர்த்தி சுரேஷிற்கு டும் டும் டும்?
தமிழ் சீரியல்களின் டாப் 10 டிஆர்பி லிஸ்ட் இதோ