மொபைல் இன்று ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. உணவுக்கு முன், உணவுக்குப் பின் உணவின் போது, வேலை செய்யும் போது என எல்லா நேரங்களிலும் மொபைலை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இன்னும் சிலர் கழிவறைக்கு சென்றால் கூட மொபைல் இல்லாமல் செல்வதில்லை. மேலும் வாட்ஸ்அப் செய்திகளை பார்க்க அடிக்கடி போனை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலானோர் காலையில் எழுந்தவுடன் மற்ற விஷயங்களை செய்வதற்கு முன் தங்கள் அலைப்பேசியை பார்ப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளர். ஆனால் இந்த பழக்கம் அவர்களின் கண்களுக்கு மோசமான தீங்கினை விளைவிக்கும். இது பல கண் தொடர்பான பிரச்சனைகளின் ஆபத்தை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.