Mobile Phone Habit: ஆபத்து அதிகம்.. செல்போன் இல்லாமல் இருக்க முடியாதவர்களுக்கு எச்சரிக்கை! - Tamil News | Know Why you should stop using mobile phone in the morning details in Tamil | TV9 Tamil

Mobile Phone Habit: ஆபத்து அதிகம்.. செல்போன் இல்லாமல் இருக்க முடியாதவர்களுக்கு எச்சரிக்கை!

Published: 

12 Nov 2024 18:20 PM

Mobile Phone Usage in Morning: பெரும்பாலானோர் தங்கள் போனை ஒரு நிமிடம் கூட பார்க்காமல் இருப்பதில்லை. தூங்கும்போது கடைசியாக செல்போனை பார்ப்பதும் எழுந்தவுடன் முதலில் செல்போனை பார்ப்பதும் மிக மோசமான விளைவை ஏற்படுத்தும்.‌ அலைபேசியை கட்டுப்பாடு இல்லாமல் பயன்படுத்துவதால் பல தீமைகள் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் ஃபோன் பார்ப்பதால் ஏற்படும் தீமைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

1 / 5மொபைல்

மொபைல் இன்று ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. உணவுக்கு முன், உணவுக்குப் பின் உணவின் போது, வேலை செய்யும் போது என எல்லா நேரங்களிலும் மொபைலை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இன்னும் சிலர் கழிவறைக்கு சென்றால் கூட மொபைல் இல்லாமல் செல்வதில்லை. மேலும் வாட்ஸ்அப் செய்திகளை பார்க்க அடிக்கடி போனை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலானோர் காலையில் எழுந்தவுடன் மற்ற விஷயங்களை செய்வதற்கு முன் தங்கள் அலைப்பேசியை பார்ப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளர். ஆனால் இந்த பழக்கம் அவர்களின் கண்களுக்கு மோசமான தீங்கினை விளைவிக்கும்.‌ இது பல கண் தொடர்பான பிரச்சனைகளின் ஆபத்தை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

2 / 5

80 சதவீத ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்கள் காலையில் எழுந்த 15 நிமிடங்களுக்குள் தங்கள் மொபைல் ஃபோன்களை பார்க்கிறார்கள். இந்த செயல் கண்களை மோசமாக பாதிக்கிறது. எனவே காலையில் எழுந்தவுடன் போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என ஐசிடி ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் 2007 ஆம் ஆண்டு ஜர்னல் ஆப் நியூரல் ட்ரான்ஸ்மிஷன் அறிக்கையின்படி காலையில் எழுந்தவுடன் மொபைல் ஃபோன்களை பார்ப்பதால் மொபைல் ஃபோனின் ஒளியின் காரணமாக உடலில் மெலடோனின் அளவு அதிகரிக்கிறது. இது உங்கள் தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் ஆகும். இந்த ஹார்மோன் உடலில் அதிகரிப்பதால், அதிகமாக தூங்க நேரிடும். இதன் விளைவாக உடல் சோர்வாக உணர ஆரம்பிக்கும்.

3 / 5

நீங்கள் படுக்கைக்கு செல்வதற்கு முன் அல்லது காலையில் தூங்கி எழுந்த பின் மின்சார கேஜெட்டைப் பயன்படுத்தினால் அது உங்கள் உயிரியல் சுழற்சியை சீர்குலைக்கும். இவற்றிலிருந்து வரும் நீல ஒளியை விழித்திரையில் உள்ள ஒலி சேர்க்கை செல்கள் உறிஞ்சிக் கொள்ளும். இதன் காரணமாக ஒரு நபர் முழுமையாக தூங்க முடியாது.

4 / 5

காலையில் எழுந்தவுடன் மொபைல் போனை பார்க்க ஆரம்பித்தால் உங்களுக்கு அது மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் உண்டாக்கும். ஒரே நேரத்தில் பல செய்திகள், மின்னஞ்சல்கள், பல்வேறு வகையான அறிவிப்புகளை பார்ப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மன அழுத்தத்துடன் அந்த நாளை தொடங்கினால் நாள் முழுவதும் மன அழுத்தத்தில் இருக்கும் சூழல் ஏற்படும்.

5 / 5

மொபைல் போனின் திரையை உற்றுப் பார்த்துக் கொண்டு நாளை தொடங்குவது கண்கள் வறண்டு போக வழிவகுக்கும். மேலும் இது பார்வையையும் பாதிக்கிறது. இது கண்களின் மாக்குலர் சிதைவு அபாயத்தையும் அதிகரிக்கிறது.

சைத்ரா ரெட்டி வீட்டில் விசேஷம்... வைரலாகும் போட்டோ
காலாவின் காதலி ஹூமாவின் நியூ ஆல்பம்
இந்திய குழந்தைகள் தினம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய சில டிப்ஸ்!