கார் விலையில் KTM பைக் புது மாடல்.. விலை மற்றும் விவரங்களை வெளியிட்ட நிறுவனம்! - Tamil News | KTM 890 Duke R, 890 Adventure R, 1390 Super Duke R launching in India on 14 November; Check Price Full specs and more in Tamil | TV9 Tamil

கார் விலையில் KTM பைக் புது மாடல்.. விலை மற்றும் விவரங்களை வெளியிட்ட நிறுவனம்!

Published: 

15 Nov 2024 09:06 AM

KTM Bike Launch: உலகில் அதிக அளவில் மோட்டார் சைக்கிளை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனம் KTM. ஆஸ்திரியா நாட்டை சார்ந்த இந்த நிறுவனம் இந்தியாவில் பஜாஜ் ஆட்டோவுடன் கைகோர்த்து வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியாவில் KTM மோட்டார் பைக்குகள்‌ புனேவில் உள்ள பஜாஜ் ஆட்டோவிற்கு சொந்தமான தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

1 / 5இந்தியாவில்

இந்தியாவில் KTM நிறுவனம் முடிந்தவரை குறைந்த விலையில் பைக்குகளை விற்பனை செய்ய முயற்சி செய்கிறது. ஆனால் 125CC கொண்ட KTM பைக்களின் விலை ரூ.2 லட்சம் முதல் அதேபோல் விலை உயர்ந்த பைக்குகளையும் இந்த நிறுவனம் தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து கொண்டிருக்கிறது.இந்த நிலையில், இன்று (நவம்பர் 14) KTM 890 Adventure R, 1390 Super Duke R மற்றும் KTM 890 Duke ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகள் கடந்த மாதத்தில் தொடங்கப்பட்டது.

2 / 5

KTM நிறுவனத்தின் சக்தி வாய்ந்த மற்றும் மிக விலை உயர்ந்த 1390 Super Duke R மற்றும் 1390 Super Adventure ஆகிய பைக்க்களுக்கு மட்டும்தான் முதலில் முன் பதிவுகள் தொடங்கப்பட்டது. பின்னர் 890 Adventure R பைக் விளக்கும் முன்பதிவு தொடங்கியது.இந்த புதிய வகை KTM பைப்புகளை முன்பதிவு செய்வதற்காக முன் பணமாக ரூ.1 ஒரு லட்சத்திலிருந்து வசூலிக்கப்பட்டது. வெளியிடப்படும் பைக்குகளில் KTM 890 Adventure R இன்‌ விலை மிக குறைந்ததாக இருக்கும். இதன் விலை ரூ.12 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.

3 / 5

பொதுவாக KTM நிறுவன பைக்குகள் பஜாஜ் ஆட்டோ தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் இன்று வெளியிடப்படும் விலை உயர்ந்த பைக்குகள் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படும். ஆஸ்திரியாவிலிருந்து சிபியூ முறையில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட இருப்பதால் இறக்குமதி அதிகமாக இருக்கும்.‌ அதன் காரணமாகவே இந்த பைக்கின் விளையும் அதிகமாக இருக்கிறது.

4 / 5

890 Duke R வேகமான மற்றும் வசீகரிக்க கூடிய ஸ்ட்ரீட் பைக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் KTM 1390 Super Duke வைக்கணும் இளைஞர்களே வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 / 5

KTM நிறுவனம் 790 Duke பைக்கை நிறுத்திய பிறகு, KTM இந்தியா தனது பெரிய பைக் சேவை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு சிறிது நேரம் எடுத்தாலும், KTM ஆர்வலர்களின் காத்திருப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

கிராம்பை வாயில் வைத்து தூங்கலாமா?
3 வேளை சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?
கரும்பு சாறு குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்..!
தேங்காய் பால் கூந்தலுக்கு ஏன் வரப்பிரசாதம் தெரியுமா..?