இந்தியாவில் தடை செய்யப்பட்ட புத்தகங்கள் இவை.. ஏன் தெரியுமா? - Tamil News | List of books banned in India for controversy details in tamil | TV9 Tamil

இந்தியாவில் தடை செய்யப்பட்ட புத்தகங்கள் இவை.. ஏன் தெரியுமா?

Updated On: 

21 Nov 2024 11:11 AM

Banned Books in India: சுதந்திர இந்தியாவில் கருத்து சுதந்திரம் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, தேசிய பாதுகாப்பு போன்றவை சீர் குலையாமல் இருப்பதற்காக சில புத்தகங்கள் தடை செய்யப்பட்டிருக்கிறது. அவற்றில் தடை செய்யப்பட்ட முக்கியமான புத்தகங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

1 / 5சல்மான்

சல்மான் ருஷ்டி எழுதிய தி சாத்தானிக் வெர்சஸ் (The Satanic Verses)‌ என்ற புத்தகம் 1988 ஆண்டு வெளியிடப்பட்ட இந்த புத்தகம் இஸ்லாமியர்களின் இறை தூதரான முகமது நபியை அவமதிக்கும் விதமாக கருத்துக்கள் உள்ளதால் இந்த புத்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இது உலக அளவில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியதால் இந்தியா மட்டுமல்லாமல் பல இஸ்லாமிய நாடுகளிலும் தடை செய்யப்பட்டது.

2 / 5

வெண்டி டோனிக்கர் எழுதிய தி ஹிந்துஸ்:அன்‌ அல்டர்னெட்டிவ் ஹிஸ்டரி (The Hindu: An Alternative History) என்ற புத்தகம் 2014 ஆம் ஆண்டு வெளியானது. இந்த புத்தகத்தில் இந்து மதத்தை அவமதிக்கும் விதத்தில் எழுதப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த புத்தகம் இந்தியாவில் தடை இந்த புத்தகத்தில் இந்து கடவுள்களையும் இந்து மதத்தினையும் அவமதிப்பதாக கண்டனங்கள் எழுந்தது.

3 / 5

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் வி.எஸ். நைபால் எழுதிய அன் ஏரியா ஆஃப் டார்க்நெஸ் (An Area of Darkness) என்ற புத்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்த புத்தகத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களும் இந்தியாவைப் பற்றி எதிர்மறையான சித்தரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டு தடை செய்யப்பட்டது.

4 / 5

சீமர் ஹெர்ஸ் என்பவர் எழுதிய தி ப்ரைஸ் ஆஃப் பவர் (The Price of Power) என்ற புத்தகம் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் CIA‌ வுடன்‌ தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டதால் தேசிய பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டது.

5 / 5

தி‌ பாலிஸ்டர் பிரின்ஸ் (The Polyester Prince) என்ற புத்தகமும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஹாமிஷ் மெக்டொனால்ட் ‌ என்று எழுத்தாளர் எழுதிய இந்த புத்தகத்தில் இந்திய தொழிலதிபரான அம்பானியின் குடும்பத்தை பற்றி‌ தவறான தகவலை பரப்பியதாக கூறப்பட்டு இந்த புத்தகம் தடை செய்யப்பட்டது.

இரவு தூங்கும் முன் இந்த பழங்களை நிச்சயம் சாப்பிடக்கூடாது..
இந்த பிரச்சனை இருப்பவர்கள் தப்பி தவறி கூட பாதாம் சாப்பிடக்கூடாது..
குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது எப்படி?
ஓட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்..?