பிக்பாஸ் தொகுப்பாளர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா? அட இவரா? - Tamil News | List of Highest Paid Actors Among Bigg Boss Show Hosts In Tamil | TV9 Tamil

பிக்பாஸ் தொகுப்பாளர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா? அட இவரா?

Published: 

10 Oct 2024 22:36 PM

Bigg Boss Tamil: இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களிடையே மிக வரவேற்பைப் பெற்றது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது நெதர்லாந்தில் வெளியான பிக் பிரதர்ஸ் என்ற நிகழ்ச்சியைத் தழுவி தமிழில் பிக் பாஸ் என ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி எனப் பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக இருக்கும் முன்னணி நடிகர்களுக்கு கொடுக்கபடும் சம்பள விவரத்தை பார்க்கலாம்.

1 / 6தமிழ்

தமிழ் தொலைக்காட்சியில் பிக்பாஸ் ஒரு இன்றியமையாத நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. கடந்த 7 சீசனாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வந்த நிலையில் தற்போது 8 சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வருகிறார்.

2 / 6

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 வரை தொகுக்க நடிகர் கமல்ஹாசன் சுமார் 130 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலே அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர்களில் கமல் முதல் இடத்தில் இருக்கிறார்.

3 / 6

தமிழில் பிக்பாஸ் சீசன் 8 கடந்த அக்டோபர் 6 தேதியிலிருந்து தொடங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் சேதுபதி சுமார் 60 கோடிகளைச் சம்பளமாக வாங்கியுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

4 / 6

தெலுங்கு மொழியில் வெளியாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுக்க நடிகர் நாகார்ஜுனா சுமார் 30 கோடி சம்பளத்தைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

5 / 6

மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மோகன் லால்க்கு ஒரு எப்பிசோடுகளுக்கு சுமார் 20 லட்சம் வரை வாங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

6 / 6

அடுத்ததாக இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான்கான் தொகுத்து வருகிறார். இவர் இந்த நிகழ்ச்சியில் சுமார் 60 கோடிகளுக்கும் மேல் சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.

செரிமானத்தை மேம்படுத்த வேண்டுமா ? அப்போ இதை பாலோ பண்ணுங்க
மோகன் லால் உடன் இருக்கும் இந்த சிறுமி யார்?
தங்க நிற உடையில் ஜொலிக்கும் ஜான்வி போட்டோஸ் இதோ
குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வெற்றி படிநிலைகள்!
Exit mobile version