5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Theatre Release Movies : ஆகஸ்ட் மாதம் தியேட்டர் ரிலீஸ் படங்கள்.. ‘அந்தகன்’ முதல் ‘தங்கலான்’ வரை நீளும் லிஸ்ட்

Movie Update: கோலிவுட்டில் ஆகஸ்ட் மாதம் படங்களின் வெளியீடு வரிசைக் கட்டி காத்திருக்கிறது. முன்னதாக 2-ம் தேதி பல படங்கள் வெளியான நிலையில் அடுத்த அடுத்த வாரங்களில் தமிழ் சினிமாவில் கோலிவுட்டின் முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாக காத்திருக்கிறது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 06 Aug 2024 11:29 AM
இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அந்தகன்’ படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துள்ளார். படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். இதில் இந்தியில் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். படத்தில் நவரச நாயகன் கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரகனி உள்ளிட்டோரும் பிரசாந்த்துடன் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் வருகின்ற 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

1 / 8
‘சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘மின்மினி’. திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது குழந்தைகளாக இருந்து இளம் பருவத்தினராக மாறும் கதாபாத்திரங்களைக் கொண்ட கதை என்பதால், 2015-ம் ஆண்டு குழந்தைப் பருவத்தில் இருந்த கதாபாத்திரங்களை படமாக்கிவிட்டார். ‘மின்மினி’ படத்தில் எஸ்தர் அனில், பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

2 / 8
இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வீராயி மக்கள்’. வேல.ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, ஜெரால்ட் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தைப் பேசும் இந்தப் படம் வருகின்ற 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

3 / 8
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வருகின்ற 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

4 / 8
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் டிமான்டி காலனி. இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. 9 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வருகின்ற 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

5 / 8
இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். சூரி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகை அன்னாபென் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வருகின்ற 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

6 / 8
மாமன்னன் படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வாழை'.கிராமத்து கதையம்சத்துடன் கூடிய கதையோடு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கலையரசன் கதாநாயகனாக நடிக்க, நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக திவ்யா துரைசாமி நடித்துள்ளார். முழுக்க முழுக்க சிறுவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் வருகின்ற 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

7 / 8
ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள படம் ‘காந்தாரி’. ஹன்சிகா இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். எல்.வி.முத்து கணேஷ் இசை அமைத்துள்ள இதன் திரைக்கதையை தயாரிப்பாளர் தனஞ்செயன் எழுதியுள்ளார். எமோஷனல் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் வருகின்ற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

8 / 8
Follow Us
Latest Stories